தாமரை, சூரியனையும் மினி பஸ்களில் வரையலாமே: பொன். ராதாகிருஷ்ணன்

Subscribe to Oneindia Tamil

BJP opposes two leaves on Small buses
சென்னை: அரசு மினி பஸ்களில் தாமரை, சூரியன் ஏன் பம்பரம், மாம்பழம் போன்றவற்றைகளையும் இயற்கைக் காட்சிகளாக வரையலாம் என தமிழக பாஜக தலைவர் பொன்.ராதாகிருஷ்ணன் ஆலோசனைக் கூறியுள்ளார்.

திருச்சியில் வெள்ளிக்கிழமை செய்தியாளர்களை சந்தித்த பொன்.ராதாகிருஷ்ணன் பேசியதாவது:

ஏற்காடு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் பா.ஜ.க. போட்டியிடவில்லை. யாருக்கு ஆதரவு அளிப்பது என்பதை இன்னும் முடிவு செய்யவில்லை. தேர்தலுக்கு முந்தைய நாள்கூட யாருக்கு ஆதரவு என்பதை அறிவிப்போம்.

தஞ்சாவூரில் முள்ளிவாய்க்கால் நினைவு முற்றம் திறப்பதற்கு விதித்த தடை நீக்கப்பட்டு திறக்கப்பட்டது. இந்த நிகழ்ச்சிக்கு வேண்டுமானால் தடை விதிக்கலாம். ஆனால் தமிழர்களின் உணர்வுக்கு தடை விதிக்க முடியாது. இவ்வாறு அவர் கூறினார்.

அரசு சிறிய பஸ்களில் இரட்டை இலை சின்னம் வரையப்பட்டுள்ளது ஏற்புடையதல்ல. அந்த இலைகள் இயற்கை காட்சிதான் என்றால் தாமரை, சூரியன், பம்பரம், மாம்பழம் போன்றவற்றையும் குறிப்பிட்ட எண்ணிக்கை பஸ்களில் வரையலாம் என்றும் அவர் கூறினார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+