அதெல்லாம் எப்படியும் விஜயகாந்த் வந்துவிடுவார்..: தொடரும் பாஜகவின் நம்பிக்கை!
சென்னை: உளுந்தூர்பேட்டை மாநாட்டில் தேமுதிக தனித்துப் போட்டியிடலாம் என தொண்டர்கள் தெரிவித்திருப்பதாக தேமுதிக தலைவர் விஜயகாந்த் கூறினாலும் நிச்சயம் தங்களது கூட்டணிக்கு வந்துவிடுவார் என்று தமிழக பாரதிய ஜனதா கட்சி நம்பிக்கை தெரிவித்துள்ளது.
உளுந்தூர்பேட்டையில் நேற்று தேமுதிக நடத்திய ஊழல் எதிர்ப்பு மாநாட்டில் பேசிய அக்கட்சி தலைவர் விஜயகாந்த், சாதி- மதத்தை வைத்துக் கொண்டெல்லாம் இனி அரசியல் செய்ய முடியாது என்று கூறினார். இதன் மூலம் பாரதிய ஜனதாவையும் அவர் சாடினார்.
இருப்பினும் அதிமுகவைதான் அதிகம் தாக்கிப் பேசினார். கூட்டத்தின் முடிவில் தொண்டர்களிடம் கூட்டணி பற்றி கருத்து கேட்டார். பின்னர் தொண்டர்கள் தனித்துப் போட்டியிட விரும்புகின்றனர்.. ஆனாலும் கூட்டணி விஷயத்தில் தலைமையின் முடிவையும் அவர்கள் ஏற்பார்கள் என்று அறிவித்தார்.
இதனால் விஜயகாந்த் தனித்துப் போட்டியிடுவாரா? அல்லது கூட்டணி அமைப்பாரா என்ற சஸ்பென்ஸ் தொடர்கிறது.

நம்பிக்கை இருக்கிறது- பாஜக
இது குறித்து கருத்து தெரிவித்துள்ள பாஜக மாநில தலைவர் பொன் ராதாகிருஷ்ணன், இன்று நடைபெறும் கட்சியின் மாநில நிர்வாகிகளின் ஆலோசனை கூட்டத்தில் தேமுதிகவின் முடிவு தொடர்பாகவும் ஆலோசிக்கிறோம். எங்கள் கூட்டணிக்கு தேமுதிக நிச்சயம் வரும் என்ற நம்பிக்கை தற்போதும் எங்களுக்கு இருக்கிறது என்றார்.

தமிழருவி மணியன் நம்பிக்கை
இதேபோல் பாஜக- தேமுதிக கூட்டணிக்காக முயற்சிகளை மேற்கொண்டு வரும் தமிழருவி மணியனும் பாஜக அணியில் தேமுதிக இடம்பெறும் என நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

விஜயகாந்த் எதுவும் சொல்லவில்லையே
இது குறித்து அவர் கூறுகையில், லோக்சபா தேர்தலில் கூட்டணி அமைக்கலாமா அல்லது தனித்துப் போட்டியிடலாமா என்று தொண்டர்களிடம் விஜயகாந்த் கருத்து கேட்டார். தொண்டர்கள் தனித்துப் போட்டியிடலாம் என்று கூறினர். ஆனால் விஜயகாந்த் எந்தக் கருத்தையும் தெரிவிக்கவில்லை.

இன்னமும் விஜயகாந்த் முடிவு எடுக்கலை
அதேசமயம் தொண்டர்கள் கூறும் கருத்தைத் தலைவர் மாற்றுவதற்கும் வாய்ப்பு உண்டு என்று அவர் கூறியுள்ளார். அதனால் விஜயகாந்த் இன்னும் முடிவு செய்யவில்லை என்று தெரிகிறது. பாஜக கூட்டணிக்கு நிச்சயம் அவர் வருவார் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது என்றார்.
-
முதலில் இயக்கம்.. அடுத்து அரசியல் கட்சி.. உறுதியாக நிற்கும் அண்ணாமலை.. நாளை வெளியாகிறது அறிவிப்பு! -
பலே ஆளுங்க அண்ணாமலை.. ‘பயோ’வைப் பாருங்களேன்! பிள்ளையையும் கிள்ளி.. தொட்டிலையும் ஆட்டி.. பரபர பாஜக! -
அந்த 2 லேடீஸ்..1 மாஜி தலை! பாஜக மண்ணைக் கவ்வ ‘இவர்கள்’ தான் காரணம்! அமித் ஷாவிடம் அடுக்கிய அண்ணாமலை! -
அண்ணாமலையை பஞ்சராக்கிய பாஜக டபுள் இன்ஜின்.. 5 வருஷம் ஆட்டத்தின் அன்டோல்டு கதை -
அந்த ‘4’ ஓல்டு ஸ்டூடண்ட்ஸ்.. என்னை ஒதுக்கி ஓரம் கட்டிட்டாங்க! நபினிடம் கொட்டித் தீர்த்த அண்ணாமலை! -
ராஜ்யசபா சீட் கொடுத்த பாஜக தலைமை.. திட்டவட்டமாக மறுத்த அண்ணாமலை.. அடுத்த 6 மாதத்திற்கு மெகா பிளான் -
"சிங்க பெண்ணுக்கே பாதுகாப்பில்லாத ஆட்சி!" பெண் காவலருக்கு பாலியல் தொல்லை.. சாடிய நயினார் நாகேந்திரன் -
அண்ணாமலையா, மோடியா.. பாஜக ஆதரவாளர்களுக்கு இப்போ டெலிகேட் பொசிஷன்! -
ரஜினியின் ஆசி கிடைக்குமா! சிஸ்டத்தை மாற்றும் ‘ஆன்மீக அரசியல்’ முழக்கத்தை கையில் எடுக்கும் அண்ணாமலை? -
"வீட்டு வேலை செய்த பெண் டூ மாண்புமிகு அமைச்சர்.." மேற்கு வங்கத்தில் பாஜக செய்த சம்பவம்! -
டைம் பார்த்து அடிக்க ரெடியாகும் பாஜக? தொகுதி மறுவரையறை, ஒரே நாடு ஒரே தேர்தல்! மோடி போடும் கணக்கு -
அரபு நாடுகள் மாதிரி..பாலியல் குற்றவாளிகளுக்கு என்கவுண்டர் தான் தீர்வு! வெடித்துக் கிளம்பிய பிரேமலதா!











Click it and Unblock the Notifications