Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

கைது பீதி.. பதுங்கியிருக்கும் எச் ராஜாவுக்கு காவலாக பண்ணை வீட்டில் குவிந்திருக்கும் பாஜக நிர்வாகிகள்

Subscribe to Oneindia Tamil

Recommended Video

    பண்ணை வீட்டில் பாதுகாப்பாக இருக்கும் எச்.ராஜா- வீடியோ

    சிவகங்கை: நீதிமன்றம் மற்றும் போலீசாரை அவதூறாக பேசியதால் கைது செய்யப்படுவோம் என்ற அச்சத்தால் பதுங்கியுள்ள எச் ராஜாவுக்கு காவலாக அவரது காரைக்குடி பண்ணை வீட்டில் பாஜகவை சேர்ந்த முக்கிய நிர்வாகிகள் சிலர் தங்கியுள்ளனர்.

    புதுக்கோட்டை மாவட்டம் மெய்யப்புரத்தில் நேற்று முன்தினம் நடந்த விநாயகர் சதுர்த்தி ஊர்வலத்தில் கலந்து கொண்ட பாஜக தேசிய செயலாளர் எச் ராஜா, போலீசாரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.

    அப்போது, சென்னை உயர்நீதிமன்றம் மற்றும் காவல்துறை குறித்து அவர் இழிவாக பேசினார். இந்த வீடியோ காட்சிகள் இணையத்தில் வெளியாகி வைரலானது.

    வழக்குப்பதிவு

    எச் ராஜாவின் பேச்சுக்கு பல்வேறு தரப்பினரும் கண்டனம் தெரிவித்தனர். இதைத்தொடர்ந்து எச்.ராஜா மீது வழக்கு போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

    திருமயம் காவல்துறை

    புதுக்கோட்டை திருமயம் காவல் துறையினர் எச் ராஜா மீது 8 பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்துள்ளனர். 505,501,143,188,553, 153A உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

    பகையை உருவாக்குவது

    அவதூறு , அவமதிப்பு , அனுமதி இன்று கூடுதல் , உத்தரவிற்கு கட்டுப்படாமை உள்ளிட்ட உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இதில் 153A பிரிவு என்பது ஜாதி மதம், ஊர், மொழி, இனம் ஆகியவற்றின் பெயரால் இரண்டு பிரிவிற்கிடையே பகைமையை உருவாக்குவது என்பதாகும்.

    தனிப்படை போலீஸ்

    தனிப்படை போலீஸ்

    போலீசார் வழக்குப்பதிவு செய்ததை தொடர்ந்து எச் ராஜா எப்போது வேண்டுமானாலும் கைது செய்யப்படலாம் என்று கூறப்படுகிறது. மேலும் எச் ராஜாவை கைது செய்ய இன்ஸ்பெக்டர் மனோகரன் தலைமையில் 5 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது.

    பண்ணை வீட்டில் பதுங்கல்

    பண்ணை வீட்டில் பதுங்கல்

    இதைத்தொடர்ந்து எச் ராஜா தலைமறைவாகிவிட்டதாக கூறப்பட்டது. இந்நிலையில் சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அருகே தனக்கு சொந்தமான பண்னை வீட்டில் எச் ராஜா பதுங்கியிருப்பது தெரியவந்துள்ளது.

    நிர்வாகிகள் காவல்

    நிர்வாகிகள் காவல்

    அவரது வீட்டில் மாவட்ட பாஜக கட்சியின் முக்கிய நிர்வாகிகள் சிலர் இரவில் இருந்து தங்கியுள்ளனர். எச் ராஜாவை காவல்துறை கைது செய்தாலும் செய்யலாம் என்பதற்காக பாஜக கட்சியின் முக்கிய பொறுப்பில் உள்ள நிர்வாகிகள் சிலர் எச் ராஜாவுக்கு காவலாக இரவில் இருந்து அவரது பண்ணை வீட்டில் தங்கியுள்ளனர் .

    More From
    Prev
    Next
    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+