For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

சினிமாவின் சில நிமிட காட்சிகளுக்கே தொடை நடுங்கிய பாஜக... மக்கள் எதிர்ப்பை எப்படித்தான் சமாளிக்குமோ?

மெர்சல் பட காட்சிகளுக்கே பதைபதைத்துப் போயிருக்கும் பாஜக மக்கள் எதிர்ப்பை எப்படித்தான் எதிர்கொள்ள இருக்கிறதோ?

By Mathi
Google Oneindia Tamil News

சென்னை: புதிய இந்தியாவை கொண்டு வருவோம் என சொல்லிச் சொல்லியே மக்களை முட்டுச் சந்தில் நிற்க வைத்துவிட்டது பாஜக. இதைத்தான் மெர்சல் படத்தின் காட்சிகள் சுட்டிக்காட்டுகின்றன. மெர்சல் படத்தின் சில நிமிட காட்சிகளுக்கே தொடை நடுங்கிப் போன பாஜக மக்களின் எதிர்ப்பை முழுமையாக எப்படி எதிர்கொள்ளப் போகிறது என்பதுதான் தெரியவில்லை.

2014-ம் ஆண்டு நரேந்திர மோடியை பிரதமர் வேட்பாளராக பாஜக முன்னிறுத்தியது. காங்கிரஸின் 10 ஆண்டுகால ஆட்சி மீதான வெறுப்பினால் மக்கள் பாஜகவுக்கு வாக்களித்தனர்.

ஆட்சிக் கட்டிலில் அமர்ந்துவிட்ட உடனே பாஜகவின் அதிகார மமதை உச்சத்தை எட்டியது. பாஜகவின் முன்னணி, பின்னணி அமைப்புகள் எல்லாம் தடி எடுத்து தண்டல்காரனாகினார்கள்.

வன்முறையாளர்கள்

வன்முறையாளர்கள்

விளைவு இதுவரை இந்தியா கண்டிராத அத்தனை வித வன்முறைகளும் அரங்கேறியது. மாட்டிறைச்சி வைத்திருக்கிறார் என்கிற சந்தேகத்தின் பெயரிலேயே திடீர் கலாசார குண்டர்கள் சட்டத்தைக் கையிலெடுக்க அனுமதிக்கப்பட்டது.

மாநில உரிமைகள் பறிப்பு

மாநில உரிமைகள் பறிப்பு

மாநிலங்களின் உரிமைகளைப் பற்றி கிஞ்சித்தும் கவலைப்படமால் ஈவிரக்கமற்ற முறையில் ஒற்றை இந்தியாவை உருவாக்குவதில் அப்படி ஒரு மும்முரம் காட்டியது. வழக்கொழிந்த சமஸ்கிருதத்துக்கு வாழ்வளிப்பதில் பிடிவாதம் காட்டியது. இந்தி மொழியை அம்மொழி பேசாத மக்களிடத்தில் திணித்தது.

பணமதிப்பிழப்பு

பணமதிப்பிழப்பு

அதுமட்டுமின்றி தமிழகத்தின் அத்தனை உரிமைகளையும் காவு கொண்டு காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காமல் 400 விவசாயிகளின் பரிதாப மரணத்துக்கு காரணமாகவும் இருந்தது. இதன் உச்சமாக ஒட்டுமொத்தமாக இந்தியாவை நடுத்தெருவில் பிச்சைக்காரர்களைப் போல பணமதிப்பிழப்பு நடவடிக்கை மூலம் அலையவிட்டது.

செத்தது புதிய இந்தியா

செத்தது புதிய இந்தியா

பணமதிப்பிழப்பின் கொடூர தாக்குதலில் இருந்து மீண்டு மூச்சுவிடுவதற்குள் ஜிஎஸ்டி எனும் மூர்க்கதனமான பேரிடியை திணித்தது. பிறக்க வேண்டிய புதிய இந்தியா செத்தே போய்விட்டது என பொருளாதார வல்லுநர்கள் வெளுத்துக் கட்ட பம்மிக் கொண்டிருக்கிறது பாஜக.

ரணகளத்துக்கு மருந்தாக மெர்சல்

ரணகளத்துக்கு மருந்தாக மெர்சல்

இந்நிலையில் நடிகர் விஜய் நடித்த மெர்சல் படம், மக்களின் நாடித்துடிப்பை பற்றி பேசியது. ஜிஎஸ்டி, டிஜிட்டல் இந்தியா மோசடித்தனங்களை சில நிமிடங்களில் பேச.. ரணகளமாக பாதித்த மக்களுக்கு பேராறுதலாகிப் போய்விட்டது.

பம்மிய மெர்சல் குழு

பம்மிய மெர்சல் குழு

இதனால் பாஜக இப்போது தொடை நடுங்கிப் போய் மிரட்டல் விடுத்திருக்கிறது மெர்சல் படக் குழுவுக்கு. பாஜகவின் நெருக்கடிக்குள்ளாக்கி மத்திய அரசுக்கு எதிரான வசனங்களை நீக்குவதாக மெர்சல் தயாரிப்பாளர் அறிவித்தும் இருக்கிறது. அதேநேரத்தில் பாஜக ஒன்றை மறந்துவிட்டது. மெர்சல் திரைப்படக் குழுவை மிரட்டும் இவர்கள் தங்கள் மீது ஒட்டுமொத்தமாக செம காண்டில் இருக்கும் பல கோடி இந்தியர்களை என்னப் போகிறார்கள்.. எப்படி சமாளிக்கப் போகிறார்கள்.. !?

English summary
BJP is very shocking over the Vijay's Mersal Scenes against the Centre whiche was applauded by the fans.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X