டெல்லியில் ராஜ்நாத்சிங், ராகுலை சந்திக்க காத்திருந்து ஏமாந்த விஜயகாந்த்
சென்னை: கூட்டணியை பற்றி டெல்லி செய்தியாளர்களிடம்தான் தெரிவிப்பேன் என்று சொல்லிவிட்டுப் போன தேமுதிக தலைவர் விஜயகாந்தை சந்திக்க பாஜக, காங்கிரஸ் தலைவர்கள் நேரம் ஒதுக்க மறுத்ததால் ஏமாற்றத்துடன் சென்னை திரும்பியிருக்கிறார்
லோக்சபா தேர்தல் கூட்டணி விவகாரத்தில் தேமுதிகவுக்கு நல்ல டிமாண்ட் இருந்து வந்தது. இதனால் பாரதிய ஜனதா, திமுக, காங்கிரஸ் ஆகியை அக்கட்சியை வளைக்க முட்டி மோதிப் பார்த்தன.
ஆனால் பொதுக்குழுவில் சொல்கிறேன், உளுந்தூர்பேட்டையில் சொல்கிறேன் என்று இழுத்தடித்த விஜயகாந்த் எந்த முடிவையும் இன்னமும் எடுக்கவில்லை. இதனால் காத்திருந்த கட்சித் தலைவர்கள் அனைவருமே கடுப்பின் உச்சத்தில் இருக்கின்றனர்.

திடீர் டெல்லி பயணம்
இந்த நிலையில் திடீரென டெல்லி சென்று பிரதமர் மன்மோகன்சிங்கை சந்தித்து மனு ஒன்றை கொடுத்தார் விஜயகாந்த். இந்த மனு கொடுக்க புறப்பட்ட போது சென்னை விமான நிலையத்தில் கூட்டணி குறித்து டெல்லி செய்தியாளர்களிடம் அறிவிக்கப் போகிறேன் என்று பில்டப் கொடுத்தும் சென்றார்.

கொந்தளித்த கேப்டன்
ஆனால் டெல்லியில் கூட்டணி குறித்து செய்தியாளர்கள் கேள்வி கேட்க, உனக்கு எதுக்கு பதில் சொல்லனும்.. போய்யா போ.. என்று எகிறி அடிக்க பாய்ந்து 'திராணியை' வெளிப்படுத்தினார் விஜயகாந்த். அங்கே 'டேரா' போட்ட விஜயகாந்த் பாரதிய ஜனதா மற்றும் காங்கிரஸ் மூத்த தலைவர்களை சந்திக்க நேரம் கேட்டிருக்கிறார்.

"பிசி" சொன்ன ராஜ்நாத்சிங் தரப்பு
பாஜக தலைவர் ராஜ்நாத்சிங்கை சந்திக்க அதி தீவிரமாக விஜயகாந்த் முயன்றிருக்கிறார். ஆனால் பதிலோ 'பிசி" என்றுதான் வந்திருக்கிறது. ராஜ்நாத்சிங்கை சந்திக்க விஜயகாந்த் முயன்றது உண்மைதான்.. ஆனால் அவரால் சந்திக்க முடியவில்லை என்று அக்கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான இல. கணேசன் உறுதிப்படுத்தியும் இருக்கிறார்.

ராகுலும் சந்திக்க மறுப்பு
இதேபோல் ராகுல் காந்தியை சந்தித்து பேசவும் ரொம்பவும் மெனக்கெட்டிருக்கிறார் விஜயகாந்த். ஆனால் அங்கிருந்தும் க்ரீன் சிக்னல் எதுவும் வரவில்லை. இந்த விரக்தியில் வெறுங்கையோடு சென்னை வந்த விஜயகாந்த், கூட்டணியை பற்றி விரைவில் அறிவிக்கிறேன் என்று பழைய பல்லவியையே பாடியிருக்கிறார்.

ஓட வைக்கும் 'தேர்தல் செலவு" பேரம்
விஜயகாந்த் தரப்பு முன்வைத்ததாக சொல்லப்படும் "தேர்தல் செலவு" பேரம்தான் பாஜக, காங்கிரஸ் தலைவர்களை தலைதெறிக்க ஓட வைக்கிறது என்கிறது டெல்லி அரசியல் வட்டாரங்கள்..
-
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
நம்ப வச்சு கழுத்தறுத்து.. டெல்லிக்கே சென்று சாதித்த நயினார்! அண்ணாமலை ஆங்கிரிக்கு இது தான் காரணம்! -
அண்ணாமலை தொடங்கும் புது இயக்கம்.. பெரிய பிளானில் மாஜி ஐபிஎஸ்.. அப்போ கட்சி எப்போது? கசிந்த தகவல் -
1000% கன்ஃபார்ம்.. புதிய கட்சி ஆரம்பிக்கும் அண்ணாமலை! அடுத்த வாரம் இருக்கு கச்சேரி! பரபர பாஜக! -
டெல்லியில் க்ளைமாக்ஸ்! நெருங்கும் மெகா பிளான்.. பிரதமர் மோடியின் மத்திய அமைச்சரவையில் அதிரடி மாற்றம் -
டைம் பார்த்து அடிக்க ரெடியாகும் பாஜக? தொகுதி மறுவரையறை, ஒரே நாடு ஒரே தேர்தல்! மோடி போடும் கணக்கு -
தமிழகத்தில் விரைவில் மேலும் ஒரு கட்சி? புதிர் வைத்த கார்த்தி சிதம்பரம்! யாரா இருக்கும்? -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
10ல் 1ல் மட்டுமே வெற்றி.. எனன் நடந்தது? தேமுதிக மா.செக்களை அழைத்து விசாரிக்கும் பிரேமலதா விஜயகாந்த் -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
திரிணாமுல் எம்பிகள் மீது தொடர் தாக்குதல்.. பாஜகதான் காரணமா? வெளியான ஷாக் தகவல்! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம்












Click it and Unblock the Notifications