பூரண மது விலக்கு கோரி பாஜக போராட்டம்: தமிழிசை சவுந்தரராஜன் கைது
சென்னை: பூரண மதுவிலக்கை அமல்படுத்த கோரி சென்னையில் ஆர்பாட்டம் நடத்திய பாஜக மாநில தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் உள்ளிட்ட நூற்றுக்கணக்கானோர் கைது செய்யப்பட்டனர்.
தமிழகத்தில் பூரண மது விலக்கை அமல்படுத்த வலியுறுத்தி, பாஜக சார்பில் மாநிலம் முழுவதும் இன்று வெள்ளிக்கிழமை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

சென்னையில் வடபழனி 100 அடி சாலை சந்திப்பு அருகில் உள்ள டாஸ்மாக் கடை உள்பட 15 இடங்களில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. போராட்டத்தில் பங்கேற்றுப் பேசிய தமிழிசை சவுந்தரராஜன், தமிழகத்தில் பச்சிளம் பாலகர்கள் கூட மதுப்பழக்கத்திற்கு அடிமையாக்கப்பட்டு வருவதாக கூறினார். தமிழ்நாட்டு மக்களுக்கு வழங்கப்படும் ஒரு சில இலவசங்களுக்காக இல்லத்தரசிகளின் தாலி காவு வாங்கப்படுவதாக கூறிய அவர், தமிழகம் முழுவதும் மதுக்கடைகளை மூடவேண்டும் என்றார்.

இதனைத் தொடர்ந்து அங்கிருந்த டாஸ்டாக் கடைக்கு தமிழிசை பூட்டு போட முயன்றார். அவரை காவல்துறையினர் கைது செய்து வேனில் ஏற்றினர். இதனை கண்டித்து போராட்டத்தில் ஈடுபட்ட பாஜகவினரையும் காவல்துறையினர் கைது செய்தனர்.

ஜெயங்கொண்டத்தில் டாஸ்மாக்கிற்கு எதிராக இன்று போராட்டம் நடத்திய பாஜகவினரை போலீசார் கைது செய்தனர். இதேபோல் தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகளின் முன்பு ஆர்பாட்டத்தில் ஈடுபட்ட ஏராளமானோரை போலீசார் கைது செய்தனர்.
-
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பெரிய திமிங்கலம் வருதே.. தவெகவில் ஐக்கியமாகும் அண்ணாமலை? மோடி அரசை விமர்சிப்பது ‘இதனால்’ தானா? -
அமித் ஷா நோ சொன்னதால்.. கடைசி வரை ராகுல், சோனியாவை சந்திக்காமல் திரும்பிய விஜய்.. என்ன நடந்தது? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
கிளாம்பாக்கத்திற்கு பதில் கோயம்பேடு... ஆம்னி பஸ் போல் அரசு பஸ்சும் புறப்படுமா? அமைச்சர் தந்த பதில் -
கிரிக்கெட் கடவுளே சொல்லிட்டாரு.. வைபவ் சூர்யவன்ஷியின் பேட்டிங் ஸ்டைலை புகழ்ந்த சச்சின் டெண்டுல்கர்! -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
மரண ஓலம்.. 5 லட்சம் பேர் உயிரிழப்பு.. எங்கு திரும்பினாலும் கதறும் பொதுமக்கள்.. நிலைமை மோசம் -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
தவெகவில் இணையும் 2 அதிமுக எம்எல்ஏக்கள்! ஒருவர் சி.வி.சண்முகம்! இன்னொருவர்.. வெல்லமண்டி நடராஜன் தகவல் -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு












Click it and Unblock the Notifications