தமிழகத்தில் பாஜக கூட்டணிக்காக முக்கிய கட்சியுடன் மும்முரமாய் பேச்சுவார்த்தை நடத்தும் 'நாயுடு'
தமிழக முக்கிய கட்சியை கூட்டணியில் இழுத்துப் போடுவதற்காக நாயுடுவை களமிறக்கியுள்ளது பாஜக.
Recommended Video

சென்னை: தமிழகத்தில் நல்ல வலிமையான தோளில் சவாரி செய்வதற்காக கூட்டணிப் பேச்சுகளை "நாயுடு" மூலமாக மும்முரமாக நடத்தி வருகிறதாம் பாஜக.
கேரளாவில் கூட ஈழவர் சமூக கட்சியுடன் கூட்டணி என ஒன்றை வைத்து தேர்தலை சந்தித்து பார்த்தது பாஜக. ஆனால் தமிழகத்தில் தீண்டத்தகாத கட்சியாகவே பாஜக இருந்து வருகிறது.

பம்மினாலும் அடிதான்
பாஜகவுக்கு கொல்லைப்புறமாக ஆதரவு தந்தால்கூட அந்த கட்சிகளை தூக்கி எறிவதில்தான் தமிழக மக்கள் முனைப்புடன் இருக்கிறார்கள். டெல்லியிடம் குடுமியை பறிகொடுத்துவிட்டு பம்முகிற கட்சிகளுக்கும் இதேகதிதான்.

மரண அடி நிச்சயம்
என்னதான் இந்த பேரவலத்தை உணர்ந்திருந்தாலும் மெல்லவும் முடியாமல் விழுங்கவும் முடியாமல் பேந்த பேந்த முழித்து கொண்டிருக்கின்றன சில கட்சிகள். பாஜகவுடன் கூட்டணி சேர்ந்தால் மரண அடி நிச்சயம் என இந்த கட்சிகள் அலறிக் கொண்டிருந்தாலும் எங்களுடன் சேர்ந்தே ஆக வேண்டும் என டெல்லியில் இருந்து நெருக்கடிக்கு மேல் நெருக்கடியாம்.

பவுடர்பாய் உடந்தையாம்
தமிழகத்தின் முக்கிய கட்சி ஒன்றை இப்படியான பேச்சுகளில் வளைப்பதில் நாயுடுதான் ரொம்பவே தீவிரமாக இருக்கிறாராம். அவருக்கு ஒத்து ஊதுகிறவராக 'பவுடர்பாய்' தலைவரும் இறங்கி வேலை செய்கிறாராம்.

நோ ரிப்ளையாமே
லோக்சபா தேர்தலில் ஆளுக்கு பாதி என பேசிப் பார்த்தும் கூட ஏனோ குடுமியை பறிகொடுத்த கட்சி மவுனியாக இருக்கிறதே எனவும் தமிழகத்து தலைமை ஒப்பாரி வைக்காத குறையாக புலம்பியும் பார்த்துவிட்டதாம். திண்டுக்கல் பூட்டைவிட பெரிதாக போட்டு லாக் செய்தது போல் எந்த சமிக்ஞையும் இன்னமும் தராமல் இருக்கிறதாம் முக்கிய கட்சி.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications