இந்த எச் ராஜா விஜய்க்கு பண்ணது பெரிய அநியாயம்... கட்சிக்கே கெட்ட பெயர்! - பாஜக நிர்வாகி பேட்டி
சென்னை: எச் ராஜா விஜய்க்கு மதச் சாயம் பூச முயன்றதில் நியாயமில்லை. அவரை மேலிடம் அடக்கி வைக்க வேண்டும். அவரால் கட்சிக்கே கெட்ட பெயர் என்று பாஜகவின் அறிவுசார் பிரிவு துணைத் தலைவர் பிடி செல்வகுமார் கூறியுள்ளார்.
இன்று திடீரென ஒரு செய்தியாளர் சந்திப்புக்கு அழைப்பு விடுத்தார் பிடி செல்வகுமார். இவர் வேறு யாருமல்ல, முன்பு விஜய்யின் பிஆர்ஓ, மேனேஜராக இருந்தவர். விஜய்யை வைத்து புலி படத்தை எடுத்தவர். அந்தப் படத்தால் தனக்கு பல கோடி நஷ்டம் என ஓபன் ஸ்டேட்மென்ட் கொடுத்தவர். இப்போது விஜய்யுடன் இல்லை. பாஜகவில் இணைந்து மாநில அளவில் ஒரு பொறுப்பில் உள்ளார்.

விஜய்க்கு அநியாயம்
இன்றைய செய்தியாளர் சந்திப்பில் அவர் கூறுகையில், "இத்தனை இல்லாமல் திடீரென விஜய்யை ஜோசப் விஜய் எனக் குறிப்பிட்டு அவர் மீது மதச்சாயம் பூச முயல்கிறார் எச் ராஜா. இது அநியாயம் தேசிய அளவில் கட்சிப் பொறுப்பில் உள்ள அவர் கொஞ்சமும் பொறுப்பின்றி வாய்க்கு வந்ததையெல்லாம் பேசுவதை பொறுத்துக் கொள்ள முடியாது.
Recommended Video


கண்டிக்க வேண்டும்
இந்த எச் ராஜாவால் கட்சிக்கே கெட்ட பெயர். ஒரே நாடு, ஒரே மக்கள் என்ற கொள்கையை மறந்து பிரிவினையைத் தூண்டுகிறார். இது தேசத்துக்கே விரோதமான செயல். கட்சி மேலிடம் அவரைக் கண்டிக்க வேண்டும்.

ஜோசப் விஜய் என்பது தெரியாதா?
விஜய் மதச் சார்புகளைக் கடந்தவர். அவர் மக்களுக்காக எவ்வளவோ நல்ல விஷயங்களைச் செய்துள்ளார். அப்போதெல்லாம் அவர் ஜோசப் விஜய் என்பது தெரியாதா?"

ஜிஎஸ்டி கருத்து ஓகேவா?
இப்படி பேசிக் கொண்டே போன பிடி செல்வகுமாரிடம், "அப்படி என்றால் ஜிஎஸ்டி பற்றியும் டீமானிடைசேஷன் பற்றியும் மெர்சல் படத்தில் வைக்கப்பட்ட கருத்துகள் உங்களுக்கு ஏற்புடையதா?" என்று கேட்கப்பட்டது.

அவங்களே சொல்லிட்டாங்களே...
இதற்கு பதிலளிக்க முடியாத பிடி செல்வகுமார், "அது பற்றி நான் எதுவும் சொல்ல முடியாது. அதற்கான விளக்கத்தை விஜய் தரப்பே சொல்லிடுச்சி.. நான் மதச் சார்பு விஷயத்துக்காகத்தான் இந்த பிரஸ் மீட்டை வைத்தேன்," என்றார்.
-
திமுகவை குறை கூறுவதால்.. சட்டம் ஒழுங்கு பிரச்சனையை மக்கள் மறக்க மாட்டார்கள்.. கனிமொழி கொடுத்த பதில்! -
Gen Z மீட்டிங் நடத்திய திமுக.. தவெக பலமான இடமே வேறு.. நெட்டிசன்கள் சொல்லும் விஷயம் -
தமிழகத்தில் கட்டிட அனுமதியில் புரட்சி.. ஊழல் ஒழிப்பு, முழு ஆன்லைன் முறை.. விஜய் அரசு அதிரடி உத்தரவு -
"எந்தவொரு தியாகமும் செய்யாத கூட்டம் ஆட்சிக்கு வந்துவிட்டது.." விஜய் அரசை நேரடியாக விளாசிய ஆ ராசா -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
திமுக ஒரு தீய சக்தி.. அதிமுக தீர்ந்து போன சக்தி! நேரடியாக பாய்ந்த முதல்வர் விஜய் -
ஒரு வார்த்தையில் நடிகையின் பெயரை மாற்றிய விஜய்.. பல வருடங்களுக்கு பிறகு பிரபலம் பகிர்ந்த சுவாரஸ்யம்! -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய் தலைமையில் எதிர்க்கட்சி இல்லாத ஆட்சி அமையும்".. உணர்ச்சி பொங்க பேசிய அமைச்சர் ரமேஷ் -
விஜய் அரசுக்கு டெல்லி வைக்கும் செக்? ரகசிய ஃபைல்களை திரட்டும் பாஜக.. அமித் ஷா கையில் குடுமி! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட்











Click it and Unblock the Notifications