ஜாக்பாட்.. ஒரே கல்லில் 2 மாங்காய்! எடப்பாடி அதிமுக பொதுச்செயலாளரானதால் பாஜகவுக்கு நல்லதாம் - எப்படி?
சென்னை: எடப்பாடி பழனிசாமியை அதிமுக பொதுச்செயலாளராக தேர்தல் ஆணையம் அறிவித்து உள்ள நிலையில், இதனால் அக்கட்சிக்கு ஜாக்பாட் அடித்து இருப்பதுடன் பாஜகவுக்கு நல்லது என்று கூறி உள்ளார் பாஜக மாநில பொருளாளர் எஸ்.ஆர்.சேகர்.
கடந்த ஆண்டு எடப்பாடி பழனிசாமி, ஓ பன்னீர்செல்வம் இடையே மோதல் வெடித்த நிலையில், ஜூலை 11 ஆம் தேதி எடப்பாடி தரப்பு அதிமுகவின் பொதுக்குழு கூட்டத்தை ஓபிஎஸ் தரப்பின் பல்வேறு தடைகளுக்கு மத்தியில் கூட்டியது. அதில் அதிமுகவின் இடைக்கால பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி அறிவிக்கப்பட்டார்.

இதனை எதிர்த்து உயர்நீதிமன்றம் ஓபிஎஸ் அணி வழக்கு தொடர்ந்தது. அதனை விசாரித்த உயர்நீதிமன்றம் ஜூலை 11 ஆம் தேதி நடைபெற்ற அதிமுக பொதுக்குழு கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகளுக்கு தடை விதித்தது. இதனை எதிர்த்து எடப்பாடி பழனிசாமி தரப்பு நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. அதில் அவருக்கு சாதகமாக தீர்ப்பு கிடைத்தது.
இந்த நிலையில் ஓ.பன்னீர்செல்வம் தரப்பு அதிமுக பொதுக்குழுவுக்கு தடை விதிக்கக்கோரி உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது. இந்த வழக்கின் தீர்ப்பை கடந்த பிப்ரவரி 23 ஆம் தேதி வழங்கிய உச்சநீதிமன்றம், கடந்த ஆண்டு ஜூலை 11 ஆம் தேதி எடப்பாடி தரப்பு கூட்டிய பொதுக்குழு கூட்டம் செல்லும் என்று அறிவித்தது.
அதை தொடர்ந்து கடந்த மார்ச் மாதம் 26 ஆம் தேதி அதிமுக பொதுச்செயலாளர் தேர்தலுக்கான வாக்குப்பதிவு பல்வேறு எதிர்ப்புகளுக்கு மத்தியில் நடைபெற்றது. அதில், எடப்பாடி பழனிசாமி வெற்றிபெற்றதாக அறிவிக்கப்பட்டார். இதன் மூலம் கட்சியின் நிரந்தர பொதுச்செயலாளராக பதவியேற்ற எடப்பாடி பழனிசாமி, அதிமுக பொதுச்செயலாளராக இந்திய தலைமை தேர்தல் ஆணையம் தன்னை அறிவிக்க உத்தரவிடக் கோரி டெல்லி உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
இந்த வழக்கை அண்மையில் டெல்லி உயர்நீதிமன்றம் விசாரித்த நிலையில், இது தொடர்பாக 10 நாட்களில் முடிவெடுக்க தேர்தல் ஆணையம் அவகாசம் கோரியது. டெல்லி உயர்நீதிமன்றம் இதற்கு அனுமதியளித்த நிலையில், எடப்பாடி பழனிசாமியை பொதுச்செயலாளராக அங்கீகரிக்கக் கூடாது என்று தேர்தல் ஆணையத்திடம் ஓபிஎஸ் தரப்பு மனு அளித்தது. அதிமுக மே 10 ஆம் தேதி கர்நாடக சட்டசபைத் தேர்தலில் போட்டியிட இருப்பதால் அதிமுக பொதுச்செயலாளராக தன்னை உடனே அங்கீகரிக்க வேண்டும் என்று எடப்பாடி பழனிசாமி மனு அளித்தார்

இந்த நிலையில் இந்திய தலைமை தேர்தல் ஆணையம் எடப்பாடி பழனிசாமியை அதிமுக பொதுச்செயலாளராக அங்கீகரித்து உள்ளது. மேலும் ஜூலை 11 ஆம் தேதி நடைபெற்ற பொதுக்குழு தீர்மானங்களையும் ஏற்று இருக்கிறது. இதுகுறித்து ட்விட்டரில் பதிவிட்டு உள்ள பாஜக மாநில பொருளாளர் எஸ்.ஆர். சேகர். இன்று அஇஅதிமுகவுக்கு ஜாக்பாட். நாள் ஒரே கல்லில் 2 மாங்காய். ஆம், அதன் பொதுச்செயலாளராக அண்ணன் எடப்பாடியார் அவர்களும் அதன் தேர்தல் சின்னமாக இரட்டை இலையும் இந்திய தேர்தல் ஆணையத்தால் அங்கீகரிக்கப்பட்டது என்பதுதான். ஒரே கல் இரண்டு பழம்.
ஆக பாஜக தன் ஆட்சி அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்யாது. மற்ற கட்சிகளை வீழ்த்த பயன்படுத்தாது. தன் திறமையிலும் பலத்திலும் நம்பிக்கை கொண்ட கட்சி என்பதற்கு இதைவிட வேறு என்ன சாட்சி வேண்டும். நேர் மாறாக காங்கிரஸ் சக கட்சிகளை தன் ஆட்சி அதிகாரம் கொண்டு அடக்கியது. அச்சுறுத்தியது. அழித்தது என்பதை நாம் வரலாற்றில் பார்த்தோம்." என்று குறிப்பிட்டு இருக்கிறார்.
-
இபிஎஸ் வர்றதுக்குள்ள இப்படியா.. எஸ்.பி.வேலுமணி முகத்துக்கு நேராக துரோகின்னு கத்திய அதிமுக நபர் இவரா? -
எல்லாத்தையும் நான் பாத்துக்குறேன்..நீங்க ஒத்துழைப்பு மட்டும் கொடுங்க! ர.ர.க்களுக்கு எடப்பாடி மெசேஜ்! -
தொண்டர்களுக்கு மதிப்பு கொடுங்க.. அதிமுக தலைவர்கள் திருத்தி கொள்ளணும்.. செல்லூர் ராஜூ ஒரே போடு! -
எடப்பாடி பழனிசாமிக்கு நிம்மதி.. IT விசாரணை கோரிய வழக்கை தள்ளுபடி செய்தது சென்னை உயர் நீதிமன்றம் -
விஜய்க்கு அரசு பாதுகாப்பு மேல நம்பிக்கை இல்லையா? தனி பாதுகாவலரோடு வருவது ஏன்? லாக் செய்த அதிமுக -
இதுவும் பெரிய திமிங்கலம் தான்.. அதிமுகவுக்கு அடுத்த ஆப்பு வைத்த விஜய்! சி.விஜயபாஸ்கரின் திடீர் மூவ்! -
தவெக ஆட்சி சூப்பரா இருக்கு! பாராட்டிய லீமா ரோஸ்! அப்போ எடப்பாடி சொன்ன சட்டம் ஒழுங்கு பிரச்சனை? -
இன்ஸ்டாவில் பொய் செல்லி.. ஆட்சிக்கு வந்துட்டாரு விஜய்! யாரும் கலங்க வேண்டாம்.. ஆறுதலாக பேசிய கேடிஆர் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம்












Click it and Unblock the Notifications