சட்டசபை தேர்தல்: பா.ஜ.க. கூட்டணியில் நீடிப்பதாக புதிய நீதிக் கட்சி ஏ.சி. சண்முகம் அறிவிப்பு!
சென்னை: தமிழக சட்டசபை தேர்தலில் பாரதிய ஜனதா தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் புதிய நீதிக் கட்சி நீடிப்பதாக அக்கட்சித் தலைவர் ஏ.சி. சண்முகம் அறிவித்துள்ளார்.
தமிழக சட்டசபை தேர்தலுக்கு சில 3 மாதங்களே உள்ளன. இதனால் அரசியல் கட்சிகள் கூட்டணி அமைப்பதில் படுமும்முரமாக உள்ளன.

இதில் பாஜக சார்பில் கூட்டணி குறித்து பேசுவதற்கு குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. இல.கணேசன், எச்.ராஜா, வானதி சீனிவாசன் ஆகிய பா.ஜ.க. மூத்த தலைவர்கள் அடங்கிய குழுவினர் முதலில் சிறு கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.
இந்திய ஜனநாயக கட்சித் தலைவர் பாரிவேந்தருடன் இக்குழு கடந்த வாரம் பேச்சுவார்த்தை நடத்தியது. பின்னர் இந்திய முஸ்லிம் முன்னேற்ற கழக தலைவர் சதக்கத்துல்லாவுடனும் பேச்சுவார்த்தை நடத்தினர்.
இதேபோல் புதிய நீதிக்கட்சித் தலைவர் ஏ.சி. சண்முகத்தை இன்று காலை அண்ணா நகரில் உள்ள அவரது வீட்டில் இல.கணேசன் தலைமையிலான குழுவினர் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினர்.
இந்த சந்திப்பின்போது சட்டசபை தேர்தலிலும் தேசிய ஜனநாயக கூட்டணியில் புதிய நீதிக்கட்சி இடம் பெற வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டது. இதை ஏற்றுக் கொண்ட ஏ.சி.சண்முகம், தேசிய ஜனநாயக கூட்டணியில் தொடர்ந்து புதிய நீதிக்கட்சி இணைந்து பணியாற்றும் என உறுதி அளித்திருக்கிறார்.
-
"சிங்க பெண்ணுக்கே பாதுகாப்பில்லாத ஆட்சி!" பெண் காவலருக்கு பாலியல் தொல்லை.. சாடிய நயினார் நாகேந்திரன் -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
"We the Leaders" பாஜகவுக்கு குட்பை சொல்லப் போகும் அண்ணாமலை? பரபரப்பைக் கிளப்பிய டெல்லி பயணம்! -
Annamalai: பாஜகவிலிருந்து இன்று விலகுகிறாரா அண்ணாமலை? நிதின் நபினுடன் இன்று சந்திப்பு -
நம்ப வச்சு கழுத்தறுத்து.. டெல்லிக்கே சென்று சாதித்த நயினார்! அண்ணாமலை ஆங்கிரிக்கு இது தான் காரணம்! -
அண்ணாமலை தொடங்கும் புது இயக்கம்.. பெரிய பிளானில் மாஜி ஐபிஎஸ்.. அப்போ கட்சி எப்போது? கசிந்த தகவல் -
தமிழகத்தில் விரைவில் மேலும் ஒரு கட்சி? புதிர் வைத்த கார்த்தி சிதம்பரம்! யாரா இருக்கும்? -
டைம் பார்த்து அடிக்க ரெடியாகும் பாஜக? தொகுதி மறுவரையறை, ஒரே நாடு ஒரே தேர்தல்! மோடி போடும் கணக்கு -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
திரிணாமுல் எம்பிகள் மீது தொடர் தாக்குதல்.. பாஜகதான் காரணமா? வெளியான ஷாக் தகவல்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம்












Click it and Unblock the Notifications