நாட்டுக்கு எதிரான தீய சக்திகள்தான் கம்யூனிஸ்டுகள்: ஹெச்.ராஜா தாக்கு
சென்னை: கம்யூனிஸ்டுகள் என்றாலே நாட்டுக்கு எதிரான தீய சக்திகள்தான் என்று பாஜக தேசிய செயலாளர் ஹெச்.ராஜா சென்னையில் இன்று செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
மேலும் அவர் கூறியதாவது: கம்யூனிஸ்ட் இயக்கங்கள் நாட்டில் வன்முறையை தூண்டிவருகின்றன. சீனாவில் உரிமைக்காக போராடிய மாணவர்கள் பத்தாயிரம் பேரை கொலை செய்த சம்பவத்தை பற்றி நான் கூறவில்லை. ரஷ்யா பற்றி கூறவில்லை. இந்தியாவில், கடந்த 15ம் தேதி அவர்கள் நடத்திய வன்முறையை எந்த ஊடகங்களும் கண்டுகொள்ளவில்லை. தாத்ரியில் நடந்த கொலை சம்பவத்தின்போது நாடே தூண்டிவிடப்பட்டது. இதுதான் மதசார்பின்மை என போதிக்கப்பட்டுள்ளது.

கம்யூனிஸ்டுகள் என்றாலே தீய சக்திகள். நாட்டுக்கு எதிராக பிரிவினையை தூண்டி வருபவர்கள். மக்கள் நல கூட்டணி இன்னும் ஒரு மாதம் கூட தாக்குப்பிடிக்காது. அப்படி ஒரு, ஜனநாயக விரோத கூட்டணி தமிழ்நாட்டில் இல்லாமல் இருப்பது மாநிலத்துக்கு நல்லது.
வைகோ இருப்பதாலேயே அந்த கூட்டணி உடையும். வைகோவின் குணம் அப்படிப்பட்டது. விஜயகாந்த்தை கூட்டணிக்கு வர கூறிய வைகோ, இப்போது அவரை பற்றி கடுமையாக விமர்சனமும் செய்துள்ளார்.
தமிழ்நாட்டில் 3 வருடத்தில் 81 ஆணவ கொலைகள் நடந்துள்ளன. தலித்துகளை கொடுமைப்படுத்துவோருக்கு தண்டனை பெற்றுத்தருவதில், தேசிய சராசரியைவிட தமிழக சராசரி குறைவாக உள்ளது.
-
பாஜக கொடியை நீக்கிய அண்ணாமலை.. உருவாகும் 'மக்கள் சக்தி இயக்கம்'.. காரில் வரும் புதிய கொடி! -
தமிழகத்தில் விரைவில் மேலும் ஒரு கட்சி? புதிர் வைத்த கார்த்தி சிதம்பரம்! யாரா இருக்கும்? -
கொங்கு மண்டல கணக்கு.. எடப்பாடி மீது குறையும் நம்பிக்கை.. அண்ணாமலை புதிய ரூட் எடுக்கும் பின்னணி -
Annamalai: பாஜகவிலிருந்து இன்று விலகுகிறாரா அண்ணாமலை? நிதின் நபினுடன் ஆலோசனை -
"சிங்க பெண்ணுக்கே பாதுகாப்பில்லாத ஆட்சி!" பெண் காவலருக்கு பாலியல் தொல்லை.. சாடிய நயினார் நாகேந்திரன் -
டைம் பார்த்து அடிக்க ரெடியாகும் பாஜக? தொகுதி மறுவரையறை, ஒரே நாடு ஒரே தேர்தல்! மோடி போடும் கணக்கு -
நம்ப வச்சு கழுத்தறுத்து.. டெல்லிக்கே சென்று சாதித்த நயினார்! அண்ணாமலை ஆங்கிரிக்கு இது தான் காரணம்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
"We the Leaders" பாஜகவுக்கு குட்பை சொல்லப் போகும் அண்ணாமலை? பரபரப்பைக் கிளப்பிய டெல்லி பயணம்! -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
அண்ணாமலை தொடங்கும் புது இயக்கம்.. பெரிய பிளானில் மாஜி ஐபிஎஸ்.. அப்போ கட்சி எப்போது? கசிந்த தகவல்












Click it and Unblock the Notifications