3 தொகுதியிலும் பாஜக வெற்றி பெறும் - தமிழிசை நம்பிக்கை
மூன்று தொகுதி இடைத்தேர்தல்களில் பாஜக வேட்பாளர்கள் வெற்றி பெறுவார்கள் என அக்கட்சியின் மாநில தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் நம்பிக்கை தெரிவித்தார்.
திருச்சி: தமிழகத்தில் இடைத்தேர்தல் நடைபெறவுள்ள மூன்று தொகுதிகளிலும் பாரதிய ஜனதா கட்சி வெற்றி பெறும் என அக்கட்சியின் மாநில தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்தார்.
பாஜக மாநில தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் நேற்றிரவு சென்னையில் இருந்து விமானம் மூலம் திருச்சி வந்தார். அப்போது அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில், காவிரி நீர் பிரச்சினைக்காக தி.மு.க. நடத்தியது அரசியல் சார்புடைய அனைத்து கட்சி கூட்டம் ஆகும். பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசு விவசாயிகளின் நலனிற்காக நிறைய நல்ல காரியங்களை செய்து உள்ளது.

ஒட்டு மொத்த விவசாயிகளும் பாஜகவுக்கு எதிராக இருப்பது போல் பொய் பிரசாரம் செய்யப்பட்டு வருகிறது. இதனை மக்கள் நம்ப மாட்டார்கள். பொய் பிரசாரத்தை முறியடித்து தஞ்சாவூர் உள்பட 3 தொகுதிகளிலும் பா.ஜ.க. வேட்பாளர்கள் வெற்றி பெறுவார்கள். விவசாயிகளுக்காக போராடுவதாக கூறும் வைகோ, 3 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணித்தது ஏன் ? எனவும் கேள்வி எழுப்பினார் தமிழிசை சவுந்தரராஜன்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications