விவசாயி அய்யாக்கண்ணுக்கு பளார்விட்ட பாஜக பெண் நிர்வாகி.. திருச்செந்தூர் கோவிலில் பரபரப்பு
விவசாயி அய்யாக்கண்ணுவை பாஜக பெண் நிர்வாகி ஒருவர் கன்னத்தில் அறைந்த சம்பவம் பரபரப்பை எற்படுத்தியயுள்ளது.
Recommended Video

திருச்செந்தூர்: விவசாயி அய்யாக்கண்ணுவை பாஜக பெண் நிர்வாகி ஒருவர் கன்னத்தில் அறைந்த சம்பவம் பரபரப்பை எற்படுத்தியுள்ளது.
தென்னிந்திய நதிநீர் இணைப்பு விவசாய சங்கத் தலைவர் அய்யாக்கண்ணு. இவர் விவசாயிகளின் நலன் கருதி பல்வேறு போராட்டங்கள் நடத்தி வருகிறார்.
டெல்லியில் மாதக்கணக்கில் தமிழக விவசாயிகளுக்காக விதவிதமான போராட்டங்களை நடத்தியவர் அய்யாக்கண்ணு. டெல்லியில் இவர் நடத்திய போராட்டத்துக்கு நாடு முழுவதும் உள்ள விவசாயிகள் ஆதரவு தெரிவித்தனர்.

துண்டுபிரசுரம்
இந்நிலையில் மரபணு மாற்ற விதைகளை தடை செய்யக்கோரி அய்யாக்கண்ணு தலைமையில் விவசாயிகள் சிலர் திருச்செந்தூர் முருகன் கோவிலில் துண்டு பிரசுரம் விநியோகித்தனர்.

வாக்குவாதம்
அப்போது அங்கு வந்த பாஜக பெண் நிர்வாகி, அய்யாக்கண்ணு ஒரு பிராடு என்றுக்கூறி துண்டு பிரசுரங்களை வாங்காதீர்கள் என பொதுமக்களை தடுத்தார். இதனால் அய்யாக்கண்ணுக்கும் அந்தப் பெண்ணுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

கன்னத்தில் பளார்
ஒரு கட்டத்தில் ஆத்திரமடைந்த அய்யாக்கண்ணு அந்த பெண்ணை தகாத வார்த்தையால் திட்டினார். இதனால் அதிர்ச்சியடைந்த அந்த பெண் விவசாயி அய்யாக்கண்ணுவை கன்னத்தில் அறைந்தார்.

கைகலப்பு
இதானல் இரு தரப்புக்கும் இடையே பெரும் வாக்குவாதம் ஏற்பட்டது. இருதரப்பினரும் கைகலப்பில் ஈடுபட்டனர்.

செருப்பை காட்டி மிரட்டல்
இதைத்தொடர்ந்து அந்தப் பெண் செருப்பை காண்பித்து மிரட்டினார். கோவிலுக்குள் இருதரப்பினரும் கைகலப்பில் ஈடுபட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.












Click it and Unblock the Notifications