ஹைட்ரோகார்பன் திட்டத்திற்கு கோட்டைக்காடு மக்கள் எதிர்ப்பு.. வீடுகளில் கருப்புக் கொடி ஏற்றி போராட்டம்
ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு புதுக்கோட்டை அருகில் உள்ள கோட்டைக்காடு மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து 3 நாட்களாக போராட்டம் நடத்தி வருகின்றனர். தங்களது வீடுகளில் கருப்புக் கொடி ஏற்றி இன்று தங்களது எதிர
புதுக்கோட்டை: ஹைட்ரோ கார்பன் திட்டத்தை எதிர்த்து கோட்டைக்காடு மக்கள் தங்களது வீடுகளில் கருப்புக் கொடி ஏற்றி கடும் எதிர்ப்பை தெரிவித்து வருகின்றனர்.
புதுக்கோட்டை நெடுவாசல் கிராமத்தில் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை செயல்படுத்த மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளதற்கு தமிழகம் முழுவதும் உள்ள விவசாயிகள், சுற்றுச்சூழல் அமைப்பைச் சேர்ந்தவர்கள், அரசியல் கட்சித் தலைவர்கள், சமூக இயக்கங்களைச் சேர்ந்தவர்கள் என அனைவரும் ஒன்று சேர்ந்து எதிர்த்து வருகின்றனர்.
இதே போன்று நெடுவாசல் அருகில் உள்ள கோட்டைக்காடு பகுதியில் உள்ள மக்கள் தங்களது வீடுகளில் கருப்புக் கொடி ஏற்றி கடும் எதிர்ப்பைத் தெரிவித்து வருகின்றனர். மேலும், அவர்களது கிராமத்தில் மண்ணெண்ணெய் திட்டம் என்று தொடங்கப்பட்டதை எதிர்த்தும் கடந்த 3 நாட்களாக போராட்டம் நடத்தி வருகின்றனர்.

மண்ணெண்ணெய் திட்டம்
1991ம் ஆண்டு மண்ணெண்ணெய் எடுக்கும் திட்டம் என்ற பெயரில் கோட்டைக்காட்டில் ஒரு திட்டம் தொடங்கப்பட்டது. இதுபற்றி மக்களுக்கு ஒன்றும் தெரியாத நிலையில், அப்போது அங்கிருந்த மக்கள் ஆதரவு தெரிவித்துள்ளனர். அதன் விளைவு தற்போது பெரும் பாதிப்புகளை அனுபவித்து வருவதாக இப்பகுதி மக்கள் கூறிகின்றனர்.

குடிநீருக்கே பஞ்சம்
இந்தத் திட்டம் தொடங்கியதில் இருந்து விவசாயம் கடுமையாக பாதிக்கப்பட்டிருப்பதாக இந்தப் பகுதி மக்கள் குற்றம்சாட்டியுள்ளனர். மேலும், நிலத்தில் நீர் சுத்தமாக வற்றிவிட்டதாகவும் குடிநீருக்கே அல்லல் படுவதாகவும் இப்பகுதி பெண்கள் ஆதங்கம் தெரிவித்துள்ளனர்.

எண்ணெய் கசிவு
இந்தப் பகுதியில் இரண்டு ஆண்டுகளுக்கு முன் எண்ணெய் கசிவு ஏற்பட்டுள்ளது. அப்போது இங்கு வந்த அதிகாரிகள் முறையற்ற முறையிலேயே அதனை சரி செய்துவிட்டு சென்றனர். அதாவது எண்ணெய் கசிவு ஏற்பட்ட இடம் 2 டன் லாரி மணல் கொட்டி மூடப்பட்டுள்ளது. இதன் பிறகு அதில் இருந்து துர்நாற்றம் பரவி வருகிறது. இதனால் எப்போது என்ன நடக்கும் என்ன அச்சத்திலேயே இப்பகுதி மக்கள் வாழ்ந்து வருகின்றனர்.

புற்றுநோய் பாதிப்பு
இந்தத் திட்டம் தொடங்கப்பட்டு 15 ஆண்டுகள் ஆகின்றன. இதுவரை 13க்கும் மேற்பட்டோர் புற்றுநோய் பாதிக்கப்பட்டு இறந்துள்ளனர் என்று இப்பகுதி மக்கள் அச்சம் தெரிவிக்கின்றனர். 11 ஆயிரம் 500 அடி ஆழத்தில் இரண்டு பிளாண்ட் அமைக்கப்பட்டுள்ளதால், கோட்டைக்காடு பகுதி முழுவதும் பாதிக்கப்பட்டுள்ளது.

வளர்ச்சி குன்றிய குழந்தைகள்
இந்த சம்பவத்திற்கு பிறகு இந்தப் பகுதியில் பிறக்கும் குழந்தைகள் கை, கால் ஊனமாக பிறப்பதாக இப்பகுதி பெண்கள் கூறுகின்றனர். அப்படியே, நல்ல முறையில் பிறக்கும் குழந்தைகளும் வளர வளர மூளை வளர்ச்சி குன்றிவிடுகிறது. சில குழந்தைகள் சிறு வயதிலேயே இறந்து விடுகின்றன என்ற அச்சம் தரும் தகவலை இப்பகுதி பெண்கள் தெரிவித்தனர்.
-
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம்












Click it and Unblock the Notifications