மனைவியின் ஆபாச படத்தை வெளியிடுவதாக கூறி கணவனை மிரட்டிய டிரைவர் கைது
சேலம்: மனைவியின் ஆபாசப்படத்தை வெளியிடுவதாக கூறி கணவனிடம் மிரட்டல் விடுத்த ஆட்டோ டிரைவர் கைது செய்யப்பட்டார்.
சேலம் மாவட்டத்தின், இரும்பாலை பகுதியை சேர்ந்தவர் கேசவன் (41). இவரது மனைவி செல்வி (35) (இருவரின் பெயரும் மாற்றப்பட்டுள்ளது). கேசவன் கட்டிட மேஸ்திரியாக வேலை \பார்க்கிறார். சமீபத்தில் இவருக்கு ஒரு கடிதம் வந்தது. அந்த கடிதத்தில் ஒரு ஆணுடன் செல்வி நிற்பது போன்ற படம் இணைக்கப்பட்டிருந்தது. போட்டோவில், செல்வியுடன் நிற்கும் ஆணியின் கழுத்துக்கு மேலுள்ள பகுதி மட்டும் வெட்டி எடுக்கப்பட்டிருந்தது.
இந்த கடிதம் வந்த பிறகு ஒரு மர்ம நபர் கேசவனை தொடர்பு கொண்டு உனது மனைவி என்னுடன் நெருக்கமாக இருக்கும் காட்சிகள் பல என்னிடம் உள்ளன. ரூ.5 லட்சம் பணம் மற்றும் 8 பவுன் நகையை தராவிட்டால் அந்த படங்களை இணையத்தில் வெளியிடுவேன் என்று மிரட்ிடனார்.
இதுகுறித்து அவர் இரும்பாலை போலீஸ் நிலையத்தில் கேசவன் புகார் கொடுத்தார். அதன்பேரில் வழக்கு பதிவு செய்த போலீசார், மிரட்டல் விடுத்த செல்போன் என்னை கொண்டு விசாரணை நடத்தி வந்தனர். இந்த நிலையில், செல்வியின் ஆபாச படத்தை வெளியிடுவதாக கூறி கேசவனை மிரட்டியது தாரமங்கலம் அருகிலுள்ள பெத்தாம்பட்டி மேல்காடு பகுதியை சேர்ந்த ஆட்டோ டிரைவர் செந்தில்குமார் (38) என்பது தெரியவந்தது.
மேலும், இவருக்கு உடந்தையாக இருந்த அதே பகுதியை சேர்ந்த நிலபுரோக்கர் ரகுபதி (32) என்பவரையும் கைது செய்த போலீசார் இருவரையும் சேலம் சிறையில் அடைத்தனர். செல்வியின் படம் செந்தில்குமாருக்கு எப்படி கிடைத்தது என்பது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
-
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்!












Click it and Unblock the Notifications