For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

குழந்தையை இழந்த பார்வையற்ற தம்பதிக்கு 9 ஆண்டுகளுக்கு பின் ரூ.3 லட்சம் இழப்பீடு

Google Oneindia Tamil News

மதுரை: மதுரையில் 9 ஆண்டுகளுக்கு முன்பு குழந்தையை பறிகொடுத்த பார்வையற்ற தம்பதிக்கு மதுரை உயர் நீதிமன்ற கிளை உத்தரவுபடி ரூபாய் 3 லட்சம் இழப்பீடு கிடைத்துள்ளது.

மதுரை அண்ணாநகரில் வசித்து வருபவர் முத்துமாணிக்கம். இவரது மனைவி மாரீஸ்வரி. இவர்கள் இரண்டு பேரும் பார்வையற்றவர்கள். கடந்த 2006 ஆம் ஆண்டு ஜனவரி 6 ஆம் தேதி மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் மாரீஸ்வரிக்கு பெண் குழந்தை பிறந்தது. ஆனால் குழந்தை திருடப்பட்டு விட்டது.

Blind couple compensate after 9 years for thier child

இதைத் தொடர்ந்து குழந்தையை கண்டுபிடித்து தரக்கோரி மாரீஸ்வரி உயர் நீதிமன்ற மதுரை கிளையில் மனுத் தாக்கல் செய்தார். இந்த மனுவை விசாரித்த உயர் நீதிமன்றம் தமிழ்நாடு பாதிக்கப்பட்டோர் இழப்பீட்டு நிதியில் இருந்து மாரீஸ்வரிக்கு ரூபாய் 3 லட்சம் இழப்பீடு வழங்க உத்தரவிட்டது.

இந்த வழக்கு நீதிபதிகள் வி.எஸ்.ரவி, எஸ்.நாகமுத்து ஆகியோர் கொண்ட அமர்வு முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது 3 லட்ச ரூபாய்க்கான காசோலை அரசு சார்பில் முத்துமாணிக்கம் - மாரீஸ்வரி தம்பதிக்கு வழங்கப்பட்டது. இவ்வழக்கில் 9 ஆண்டுகளுக்கு பிறகு முத்துமாணிக்கம் - மாரீஸ்வரி தம்பதிக்கு இழப்பீடு கிடைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

English summary
Madurai blind couple got compentation for their kid after 9 years of case period.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X