கன்னியாகுமரியில் கடல் திடீரென உள்வாங்கியது: படகு போக்குவரத்து ரத்து
கன்னியாகுமரி: கன்னியாகுமரியில் இன்று கடல் உள்வாங்கியுள்ளதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சுற்றுலா படகுகள் இயக்கம் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது.
சுற்றுலா முக்கியத்துவம் வாய்ந்த கன்னியாகுமரியில் கடலில் அமைக்கப்பட்டுள்ள விவேகானந்தர் மண்டபம் உள்ளிட்ட இடங்களை பார்வையாளர்கள் காண வசதியாக படகுகள் இயக்கப்பட்டு வருகின்றன.

இந்தநிலையில் இன்று காலை நீர்மட்டம் குறைந்து கடல் உள்வாங்கி காணப்பட்டது. இதனால் கடலில் அலைகள் இல்லாமல் அமைதியாக காட்சியளித்தது.
கன்னியாகுமரி கடலின் நடுவே அமைந்துள்ள விவேகானந்தர் மண்டபம் மற்றும் திருவள்ளுவர் சிலைக்கு தினமும் காலை 8 மணிக்கு படகு போக்குவரத்து வழக்கமாக தொடங்கும்.
இன்று காலையில் நீர் மட்டம் குறைந்து கடல் உள்வாங்கி காணப்பட்டதால் காலை 8 மணிக்கு படகு போக்குவரத்து தொடங்கவில்லை. இதனால் அங்கு படகு போக்குவரத்திற்காக காத்து நின்ற சுற்றுலா பயணிகள் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர். நிலைமை சீரடைந்த பின்னர், படகுகள் மீண்டும் இயக்கப்படும் என பூம்புகார் கப்பல் போக்குவரத்து கழகம் அறிவித்துள்ளது. கடல் உள்வாங்கி இருந்ததால் காலையில் கடற்கரையில் சுற்றுலா பயணிகள் கூட்டம் இல்லாமல் வெறிச்சோடி இருந்தது.
தற்போது கன்னியாகுமரியில் அடிக்கடி கடல் நீர் உள்வாங்கத் தொடங்கியுள்ளது. கடந்த ஜூலை மாதத்தில் 3 நாட்கள் கடல் நீர் உள்வாங்கியது குறிப்பிடத்தக்கது.
-
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
மும்மொழி.. மத்திய அரசுக்கு எதிராக அண்ணாமலை முதல் முறையாக கருத்து? -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
இதெல்லாம் எந்த நினைப்பில் விஜய் செய்கிறார் தெரியலையே.. மிகப்பெரிய ரிஸ்க்.. சறுக்குனா காலிதான்! -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
கூட்டுறவு கடன் தள்ளுபடி 2026.. ஆர்பிஐ விதிமுறை என்ன.. உதயநிதி ஸ்டாலினுக்கு தவெக விளக்கம் -
பிரதமர் மோடியை வணங்கி.. பத்மஸ்ரீ விருது பெற்ற சிலம்ப கலைஞர் பழனிவேல்! தமிழருக்கு பெரிய கவுரவம் -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
அவசரப்பட்டு கையெழுத்து போட்டுட்டோமோ? முட்டி மோதும் 3 அதிமுக ’மாஜி’ எம்எல்ஏக்கள்! தவெக கொடுத்த ஆஃபர்! -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
மாசம் ரூ.10000 கோடி செலவு.. படிச்சு படிச்சு மோடி சொல்ல இதுதான் காரணம்..! -
10 வருஷமா வேதனையில இருக்கேன்... எங்களை விஷம் வைத்து கொன்றுடுங்க... நடிகர் பாலா உருக்கம்!












Click it and Unblock the Notifications