தொடங்கியது குற்றாலத்தில் படகுசவாரி
குற்றாலம்: குற்றாலத்தில் படகு சவாரியை தமிழக அமைச்சர் செந்தூர்பாண்டியன் தொடங்கிவைத்தார்.
தென்பொதிகை திருத்தலமான குற்றாலத்தில் ஆண்டுத்தோறும் ஜூன்,ஜூலை,ஆகஸ்ட்.ஆகிய 3 மாதங்கள் சீசன் காலமாகும்.இந்த நாட்களில் இங்குநிறைந்துள்ள அருவிகளில் நீராட சுமார் 30இலட்சம் சுற்றுலாப்பயணிகள் வந்து செல்வது வழக்கம்.
குற்றாலம் வரும் சுற்றுலாப் பயணிகளுக்கு அருவிகளைத்தவிர பொழுது போக்கிட போதிய வசதிகள் இங்கு கிடையாது.

ஐந்தருவியில் பூங்கா.. அருகே படகு சவாரி
ஐந்தருவியில் சுற்றுசூழல் பூங்கா அமைக்கப்பட்டுள்ளது. அங்கே செல்லும் வழியில் உள்ள வெண்ணமடைக்குளத்தில் சுற்றுலாத்துறை சார்பில் படகு சவாரி சவாரி ஏற்ப்படுத்தப்பட்டுள்ளது. இதற்கு சுற்றாலாப் பயணிகள் மத்தியில் நல்ல வரவேற்ப்பு உண்டு.
ஜூன் 5 முதல் சீசன்
கடந்த ஆண்டு சீசன் களை கட்டியதால் ஜூன் 5ம் தேதியே படகு சவாரி துவங்கிய நிலையில் இந்த ஆண்டு சாரல் மழை எதிர்பார்த்த அளவில் பொழியாததால் படகு சவாரி துவங்குவதில் காலதாமதம் ஏற்பட்டு வந்தது.
சவாரி தொடக்கம்
மேலும் சுற்றுலாப் பயணிகள் படகு குழாமை திறக்க வலியுறுத்தி வந்தனர். இதனைத் தொடர்ந்து சுற்றுலாத்துறை சார்பில் படகு சவாரி தொடக்க விழா நடைபெற்றது.
அமைச்சர் கொடியசைத்தார்
நெல்லை மாவட்ட ஆட்சியர் கருணாகரன் தலைமையில் நடைப்பெற்ற விழாவில் தமிழக இந்து சமய மற்றும் அறநிலையத்துறை அமைச்சர் செந்தூர்பாண்டியன் படகு சவாரி குழாமை திறந்து வைத்து படகுசவாரியை கொடியசைத்து தொடங்கி வைத்தார்
36 படகுகள்
இங்கு 36 படகுகள் இயக்கப்படுகிறது. இதில் பெடல் படகு-18, 2 இருக்கை பெடல் படகு-9, துடுப்பு படகு-5, தனிப்படகு 4 உள்ளது.
அரை மணி நேரத்திற்கு சவாரி
இந்த படகு சவாரிக்கு அரை மணி நேரத்திற்கு கட்டணம் படகு வகையை பொருத்து நிர்ணயக்கபட்டுள்ளது . தனிப் படகு கட்டணமாக 7 5ரூபாயும், 2 இருக்கை படகிற்கு 100 ரூபாயும், 4 இருக்கை படகிற்கு 15 5ரூபாயும் வசூலிக்கப்படும்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications