சரவணா ஸ்டோர் கடையை பதறவைத்த வெடிகுண்டு புரளி - பீதியான தி. நகர் ரங்கநாதன் தெரு
சென்னை தி நகர் சரவணா ஸ்டோர்ஸுக்கு மர்ம நபர்கள் வெடிகுண்டு மிரட்டல் விடுத்துள்ளனர்.
Recommended Video

சென்னை: தி நகர் சரவணா ஸ்டோர்ஸ் கடையில் வெடிகுண்டு இருப்பதாக மர்ம தொலைபேசி வந்ததால் பதற்றம் ஏற்பட்டது. பின்னர் அது வெறும் புரளி என்று தகவல் வெளியானதால் பணியாளர்கள் நிம்மதியடைந்தனர்.
ரங்கநாதன் தெருவில் உள்ளது சரவணா ஸ்டோர்ஸ். இங்கு எந்த நேரத்திலும் கூட்டம் அதிகமாக இருக்கும். ஏராளமானோர் துணி மணி வாங்குவது என ஷாப்பிங் செய்த வண்ணம் இருப்பர்.

இந்த தெருவும் எந்நேரமும் கூட்டநெரிசலாகவே இருக்கும். பண்டிகை காலங்களில் கேட்கவே வேண்டாம்.
ரங்கநாதன் தெருவில் உள்ள சரவணா ஸ்டோர்ஸுக்கு இன்று ஒரு தொலைபேசி அழைப்பு வந்தது. அப்போது மறுமுனையில் பேசிய மர்மநபர் கடையில் வெடிகுண்டு வைத்திருப்பதாக கூறிவிட்டு இணைப்பை துண்டித்துவிட்டார்.
இதனால் அதிர்ச்சி அடைந்த ஊழியர்கள் மாம்பலம் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இதையடுத்து அவசர அவசரமாக பொருட்களை வாங்க வந்த மக்கள் வெளியேற்றப்பட்டனர்.
மோப்ப நாய்கள் வரவழைக்கப்பட்டு கடையில் சோதனை நடைபெற்றதால் ரங்கநாதன் தெருவே பரபரப்படைந்தது. ஒருமணிநேரம் நடந்த சோதனையில் வெடிகுண்டு இல்லை என்று தெரியவந்தது. வெடிகுண்டு இருப்பதாக கூறியது வெறும் புரளிதான் என்று தகவல் வெளியாகவே வாடிக்கையாளர்கள், பணியாளர்கள் நிம்மதியடைந்தனர்.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications