கல்பாக்கம் அணுமின்நிலையத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்

Subscribe to Oneindia Tamil

Bomb threat to Kalpakkam atomic center
சென்னை: தலைமை செயலகம், கல்பாக்கம் அணுமின் நிலையம், விமான நிலையம், மணலி உட்பட தமிழகம் முழுவதும் 10 இடங்களில் வெடிகுண்டு வைத்து தகர்த்து விடுவதாக ஒரு மிரட்டல் கடிதம் வந்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

கல்பாக்கத்தில் சென்னை அணுமின்நிலையம், இந்திராகாந்தி அணுஆராய்ச்சி மையம் பாவினி உட்பட மத்திய அரசின் பல்வேறு நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றன.

மத்திய தொழில் பாதுகாப்பு படையினரின் தீவிர கண்காணிப்பில் இயங்கி வரும் இந்த அணுமின் நிறுவனங்களை வெடிகுண்டு வைத்து தகர்க்கப் போவதாக இந்திரா காந்தி அணு ஆராய்ச்சி மைய இயக்குனருக்கு நேற்று முன்தினம் ஒரு கடிதம் வந்தது.

இதனைப் படித்த அணு மின் நிலைய உயர் அதிகாரிகள் உடனடியாக கல்பாக்கம் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தனர்.

இதனையடுத்து கல்பாக்கம் அணு மின் நிலையத்தைச் சுற்றிலும் கூடுதல் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. வெடிகுண்டு நிபுணர்கள் நவீன கருவிகள் மூலம் நிலையத்தைச் சோதனையிட்டு வருகின்றனர்.

குண்டு மிரட்டல் விடுக்கப்பட்ட மற்ற இடங்களிலும் சோதனை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+