ஜெ. வீட்டை குண்டு வைத்து தகர்ப்போம்..தொலைபேசியில் மிரட்டிய சிறுவன் கைது
சென்னை: சென்னை போயஸ் தோட்டத்தில் உள்ள முதல்வர் வீட்டில் குண்டுவெடிக்கும் என மர்மநபர் மிரட்டல் விடுத்துள்ளார். விழுப்புரம் மாவட்டம் மரக்காணத்தில் இருந்து காவல் கட்டுப்பாட்டு அறைக்கு மர்மநபர் போனில் மிரட்டல் விடுத்தார். போலீசார் விசாரணை நடத்தியதில் 14வது சிறுவன் போனில் பேசி மிரட்டியதாக தகவல் வரவே, சிறுவனை கைது செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
தமிழக முதல்வர் ஜெயலலிதா சென்னை போயஸ் தோட்டப்பகுதியில் உள்ள வேதா நிலையத்தில் வசித்து வருகிறார்.

இன்று காலையில் விழுப்புரத்தை அடுத்த மரக்காணம் காவல் கட்டுப்பாட்டு அறைக்கு ஒரு தொலைபேசி அழைப்பு வந்தது. அதில் பேசிய நபர், முதல்வர் வீடு உள்ள போயஸ் கார்டனில் குண்டுவெடிக்கும் என்று கூறிவிட்டு இணைப்பை துண்டித்து விட்டார்.
இது தொடர்பாக சென்னை காவல் கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து ஏராளமான போலீசார், மோப்பநாய் உதவியுடன் முதல்வரின் இல்லத்திற்கு சென்று சோதனை மேற்கொண்டனர்.
முதல்வர் வீட்டில் வெடிகுண்டு வெடிக்கும் என்று மிரட்டல் போன் வந்ததை அடுத்து பரபரப்பு ஏற்பட்டுள்ளது. தொலைபேசியில் பேசிய மர்மநபர் பற்றி விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் முதல்வர் ஜெயலலிதா வீட்டில் வெடிகுண்டு மிரட்டல் விடுத்த தஞ்சாவூரைச் சேர்ந்த ஜான்மைக்கேல் என்பவர் கைது செய்யப்பட்டார். அவர் திருவொற்றியூரில் வசித்து வந்ததாகவும், மனைவியுடன் ஏற்பட்ட தகராறில் தஞ்சாவூர் வந்ததாகவும், வெடிகுண்டு மிரட்டலில் மனைவிக்கும் பங்கு உண்டும் என்றும் அவர் போலீசில் தெரிவித்தார். இதையடுத்து அவரது மனைவியும் கைது செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
சிறுவன் கைது
வெடிகுண்டு மிரட்டல் விடுத்த நபரை போலீசார் தீவிரமாக தேடி கண்டுபிடித்தனர். பிடிபட்ட சிறுவனுக்கு வயது 14 என்றும் அவன் மனநலம் பாதிக்கப்பட்டிருப்பதாக தெரியவந்துள்ளதாகவும் போலீசார் தெரிவித்துள்ளனர். அந்த சிறுவனிடம் தொடர்ந்து விசாரணை நடந்து வருவதாக போலீசார் கூறியுள்ளனர்.
-
Thirupparankundram Files: திருப்பரங்குன்றம் பைல்ஸ் ஆவணப்பட திரையிடலுக்கு அனுமதி மறுப்பு.. "மேலிட உத்தரவு" என்ற போலீஸ் -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்?












Click it and Unblock the Notifications