இடிந்தகரையில் சரமாரி வெடிகுண்டு வீச்சால் பதட்டம்- போலீஸ் குவிப்பு!
தூத்துக்குடி: இடிந்தகரையில் இரு மீனவர் கோஷ்டிகளுக்கு இடையே பயங்கர மோதல் வெடித்தது.
இதில் சராமரியாக வெடிகுண்டு வீசப்பட்டதால் அங்கு பதற்றம் நிலவுகிறது. இதனால் அங்கு ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.
கூடங்குளம் அணு உலைக்கு எதிராக கடந்த 3 ஆண்டுகளுக்கும் மேலாக தொடர்ந்து போராட்டம் நடந்து வருகிறது. அணு உலை எதிர்ப்பு போராட்ட குழு ஒருங்கிணைப்பாளர் உதயகுமார், புஷ்பராயன், ஜேசுராஜ் உள்ளிட்டோர் இடிந்தகரையில் போராட்டத்தை முன்னிட்டு நடத்தி வருகின்றனர்.

நாடாளுமன்ற தேர்தலை ஓட்டி அவர்கள் ஊரை விட்டு வெளியேறிய போதிலும் போராட்டம் தொடர்ந்து நடந்தது. அணு உலைக்கு ஆதரவாக ஸ்டாலின் என்பவர் தலைமையில் மற்றொரு கோஷ்டியினர் செயல்பட்டு வருகின்றனர்.
அணு உலை ஆதரவு, எதிர்ப்பு மீனவ கோஷ்டியினர் இடையே அடிக்கடி மோதல் ஏற்பட்டு வருகிறது. இரு தரப்பினரும் ஒருவருக்கொருவர் வெடிகுண்டுகளை வீசி தாக்குதல் நடத்தி வருகின்றனர்.
கடந்த செப்டம்பர் 2013ல் இடிந்தகரையில் சுனாமி காலனியில் ஒரு வீட்டில் நாட்டு வெடிகுண்டுகள் பதுக்கி வைக்கப்பட்டிருந்த போது திடீரென வெடித்துச் சிதறியதில் பெண்கள், குழந்தைகள் உள்பட 7 பேர் பலியானது குறிப்பிடத்தக்கது.
இதன் எதிரோலியாக போலீசார் அதிரடி சோதனை செய்ய இருப்பதாக தகவல் கிளம்பியதால் அங்கு பதுக்கி வைக்கப்பட்டிருந்த ஏராளமான நாட்டு வெடிகுண்டுகளை கடலில் கரைத்து அழித்து விட்டனர்.
இந்த நிலையில் நேற்று மாலையில் அணு உலை ஆதரவு கோஷ்டியைச் சேர்ந்த செபஸ்தியான் என்பவருக்க சொந்தமான நாட்டுப் படகை சிலர் சேதப்படுத்தியதாக தெரிகிறது.
இதுகுறித்து போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் விசாரணை நடத்தி வந்தனர். இந்த நிலையில் திடீரென இரு கோஷ்டியினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டதாக கூறப்படுகிறது.
இதில் இருதரப்பினரும் ஒருவரை ஒருவர் தாக்கி கொண்டதோடு சராமரியாக வெடிகுண்டுகளையும் வீசிக் கொண்டனர். 20க்கும் மேற்பட்ட நாட்டு வெடிகுண்டுகளை வீசியதாக தகவல் வெளியாகியுள்ளது. இரண்டு குண்டுகளை மட்டும் போலீசார் கைப்பற்றினர்.
ஆனால் இதில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை. இதுகுறித்து தகவல் அறிந்த போலீசார் அங்கு விரைந்தனர். ஆர்டிஓ, தாசில்தார் உள்ளிட்டோர் வெடிகுண்டு வீசப்பட்ட இடத்தை பார்வையிட்டனர். இந்த சம்பவதத்தால் கூடங்குளம், இடிந்தகரையில் ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications