10 ரூபாய் நாணயங்கள் எப்படி இருந்தாலும் செல்லுபடியாகும் - ரிசர்வ் வங்கி
தற்போது புழக்கத்தில் உள்ள 10 ரூபாய் நாணயங்கள் செல்லுபடியாகும் என ரிசர்வ் வங்கி மீண்டும் அறிவித்துள்ளது.
டெல்லி: பண மதிப்பு நீக்க நடவடிக்கைக்குப் பிறகு 10 ரூபாய் நாணயங்கள் அதிக அளவில் புழக்கத்தில் உள்ளன. அவை பல்வேறு வடிவங்களில் இருப்பதால் போலி நாணயங்கள் புழக்கத்தில் உள்ளதாக ஒருவித அச்சம் பரவியது. இது குறித்து பலமுறை ரிசர்வ் வங்கி விளக்கம் அளித்துள்ளது. 10 ரூபாய் நாணயங்கள் பழையது, புதியது என எந்த வடிவத்தில் இருந்தாலும் செல்லும் என்று மீண்டும் அறிவித்துள்ளது.
இதுகுறித்து, ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

இந்திய அரசால் தயாரிக்கப்பட்ட நாணயங்களை இந்திய ரிசர்வ் வங்கி புழக்கத்தில் விடுகிறது. ரூபாய் நோட்டுகளைவிட நாணயங்கள் நீண்ட காலத்திற்குப் புழக்கத்திலிருக்கும் என்பதால் ஒரே மதிப்பில் வெவ்வேறு வடிவங்கள் மற்றும் அளவுகளில் நாணயங்கள் வெளியிடப்படுகின்றன. அந்த வகையில், தற்போது புழக்கத்தில் உள்ள 10 ரூபாய் நாணயங்களிலும் சில மாற்றங்கள் செய்யப்பட்டு அவை வெளியிடப்படுகின்றன.
கடந்த 2010 ஜூலை 15 ஆம் தேதி புதிதாக ரூபாய் சின்னம் அறிவிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து 10 ரூபாய் நாணயங்களும் அந்த குறியீட்டுடன் தயாரிக்கப்பட்டன. ஏற்கெனவே புழக்கத்தில் உள்ள 10 ரூபாய் நாணயங்களிலிருந்து அவை சற்றே மாறுபட்டுத் தோன்றினாலும், இரண்டுமே சட்டப்படி செல்லுபடியாகும். மேலும் இத்தகைய நாணயங்கள் அனைத்துவிதமான பரிவர்த்தனைகளுக்கும் ஏற்றுக்கொள்ளப்படும்.

எனவே பொதுமக்கள் இதுகுறித்து வரும் வதந்திகளை புறக்கணித்து, 10 ரூபாய் நாணயங்களை தொடர்ந்து பயன்படுத்தலாம் என இந்திய ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.
பெட்டிக்கடைகள், சிறு வியாபாரிகள் தான் 10 ரூபாய் நாணயங்கள் வாங்க மறுத்து வருகின்றனர். பண மதிப்பு நீக்க நடவடிக்கைக்குப் பின்னர் ரிசர்வ் வங்கி அதிக அளவில் பத்து ரூபாய் நாணயங்களை மக்களுக்கு வழங்கியது. இப்போது அவற்றை செலவு செய்ய முடியாமல் மக்கள் தவித்து வருவதால் மீண்டும் மீண்டும் ரிசர்வ் வங்கி மக்களுக்கு விளக்கம் அளித்து வருகிறது.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications