ஆந்திரா போலீசின் மிருகத்தனம்..13 வயது சிறுவனை 5 நாட்களாக சங்கிலியில் கட்டி வைத்து கொடூர சித்ரவதை!
சென்னை: ஆந்திரா போலீசார் 13 வயது சிறுவனை சங்கிலியால் கட்டி வைத்திருக்கும் வீடியோ காட்சிகள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
20 அப்பாவித் தமிழர்களை செம்மரம் வெட்டியதாக கூறி சுட்டுப் படுகொலை செய்தது தொடர்பாக ஆந்திரா போலீசார் மீது ஹைதராபாத் நீதிமன்ற உத்தரவின் பேரில் கொலை வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில் ஆந்திரா மாநிலம் பிரகாசம் மாவட்டத்தில் செயின் பறித்ததாக 13-வயது சிறுவனை 5 நாட்களாக காவல் நிலையத்திலேயே சங்கிலியால் பிணைத்து ஜன்னலில் கட்டிவைக்கப்பட்டிருக்கும் காட்சியுடன் வீடியோ வெளியாகி இருக்கிறது. வீடியோ காட்சியில் இருந்து எடுக்கப்பட்ட புகைப்படமும் சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு வருகிறது.
இது குறித்து பிரகாசம் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் ஸ்ரீகாந்த் கூறுகையில், சிறுவன் பிடிபட்ட சம்பவத்தன்று காவல்நிலையத்தில் ஒரே ஒரு காவலர் மட்டுமே இருந்துள்ளார். அவர் சாப்பிடுவதற்கு வெளியே செல்லும் போது சிறுவன் தப்பி ஓடிவிடாமல் இருப்பதற்காகவே சங்கிலியால் கட்டி போட்டதாகவும் இது குறித்து விசாரணை நடந்து வருவதாகவும் கூறினார்.
கடந்த மாதம் தெலுங்கானாவில் 13 வயது சிறுவன் ரூ300 திருடியதற்காக இதேபோல் சங்கிலியால் கட்டி போலீசார் சித்ரவதை செய்திருந்ததும் குறிப்பிடத்தக்கது.
-
முதல்வர் விஜய் வீடு அருகே பரபரப்பு: பனையூரில் ரத்தக் காயங்களுடன் ஆண் சடலம்.. போலீசார் தீவிர விசாரணை! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள்












Click it and Unblock the Notifications