காதலியை பாலியல் வன்கொடுமை செய்த காதலனை அடித்தே கொன்ற உறவினர்கள்
சேலம்: காதலித்த மாணவியின் இறப்புக்கு காரணமான காதலனை உறவினர்கள் அனைவரும் அடித்தே கொன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
வாழப்பாடி அருகே உள்ளது மலையாலபட்டி கிராமம். இங்குள்ள கருங்காடு பகுதியை சேர்ந்தவர் கந்தசாமி.மலைவாழ் மக்கள் சமூகத்தை சேர்ந்த இவர் விவசாய கூலிவேலை செய்துவருகிறார். இவரது மகள் சங்கீதா நாமக்கல் மாவட்டத்தில் உள்ள மங்களபுரம் அரசு மேல்நிலைப்பள்ளியில் 11 ஆம் வகுப்பு படித்து வந்தார்.
கந்தசாமியின் உறவுமுறைதான் கொலை செய்யப்பட்ட சின்னராசு. இவர் வெளியூர்களில் கட்டிட வேலைக்கு சென்றுவருகிறார். சின்னராசும், சங்கீதாவும் காதலித்து வந்துள்ளார். இரண்டு குடும்பத்தினருமே உறவினர்கள் என்பதால் இதைப்பற்றி யாரும் பெரிதாக எடுத்து கொள்ளவில்லை.
கடந்த 31 ஆம் தேதி பள்ளிக்கு சென்ற சங்கீதா மாலையில் வீட்டுக்கு திரும்பி வரவில்லை.அன்று சின்னராசுவும் ஊரிலிருந்து வெளியே சென்றுவிட்டார். வழக்கமாக சின்னராசு வேலைக்கு போகும் இடங்களிளெல்லாம் போய் தேடிய உறவினர்கள் சின்னராசு-சங்கீதா இருவரும் ஓடிப்போய் விட்டதாக நினைத்து அவர்களாகவே திரும்பி வரட்டும் பிறகு பார்த்துக்கொள்ளலாம் என்ற எண்ணத்தில் காவல் நிலையத்தில் கூட புகார் கொடுக்காமல் இருந்து வந்துள்ளனர்.
இந்த நிலையில் நேற்று மாலை நான்கு மணிக்கு சின்னராசு மட்டும் தனியாக ஊருக்கு வந்துள்ளார். அப்போது, கந்தசாமி மற்றும் அவரது உறவினர்கள் சங்கீதா எங்கே என்று கேட்டபோது, எனக்கு தெரியாது என்று சின்னராசு சொல்லியுள்ளார்.
உடனே உறவினர்கள் சிலர் சின்னராசுவை பிடித்து உதைத்து விசாரித்ததில், தான் வெளியூர் சென்ற அன்று பக்கத்திலிருக்கும் ஒரு கரட்டுப்பகுதியில் சங்கீதாவை பார்த்ததாக சொல்லியுள்ளார். அங்கிருந்த சங்கீதாவின் உறவினர்கள், சின்னராசுவை கூட்டிகொண்டு அவர் சுட்டிகாட்டிய மலைப்பகுதிக்கு கூட்டிபோய் பார்த்தபோது ஒரு பாறையின் மீது மாணவி சங்கீதா பிணமாக கிடந்துள்ளார்.
அவரது உடலில் பல இடங்களில் நகக்கீறல் காயங்களுடன் சங்கீதா அணிந்திருந்த உடைகள் தாறுமாறாக கிழிக்கப்பட்டு அவர் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டிருப்பது தெரிந்துள்ளது.
மாணவி சங்கீதா கொலை செய்யப்பட்டு இரண்டு நாட்கள் ஆன நிலையில் அலங்கோலமாக கிடந்த சங்கீதாவின் உடலை பார்த்ததும் அவரது தந்தை கந்தசாமி மற்றும் அவரது உறவினர்கள் சின்னராசுவை அந்த இடத்திலேயே போட்டு அடித்து உதைத்ததில் அவரும் அந்த இடத்திலேயே உயிரிழந்துவிட்டார்.
இச்சம்பவம் பற்றி தகவல் அறிந்த போலீசார் அவ்விடத்துக்கு விரைந்து சென்று சங்கீதா மற்றும் சின்னராசு ஆகிய இருவரின் உடலையும் கைபற்றினர். மேலும் அவர்களின் உடல்கள், உடற்கூறு ஆய்வுக்காக சேலம் அரசு மோகன் குமாரமங்கலம் மருத்துவகல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டுள்ளது.
இவ்வழக்கு சம்பந்தமாக சங்கீதாவின் தந்தை மற்றும் உறவினர்கள் மேல் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
-
மும்மொழி.. மத்திய அரசுக்கு எதிராக அண்ணாமலை முதல் முறையாக கருத்து? -
பிரதமர் மோடியை வணங்கி.. பத்மஸ்ரீ விருது பெற்ற சிலம்ப கலைஞர் பழனிவேல்! தமிழருக்கு பெரிய கவுரவம் -
மாசம் ரூ.10000 கோடி செலவு.. படிச்சு படிச்சு மோடி சொல்ல இதுதான் காரணம்..! -
அண்ணன் வர்றாரு! என்னப்பா ஆரம்பிச்சுருவோமா? அண்ணாமலை ஆரம்பிக்கும் ’பார்ட்டி’.. இதுதான் கொடி, சின்னமா? -
விஜய் செய்த சாணக்கியத்தனம்.. சத்தமில்லாமல் வெளியேற்றப்பட்ட கம்யூனிஸ்ட்கள்! இதை யாரும் கவனிக்கலையே! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
இசக்கி சுப்பையா யார் தெரியுமா? அடுத்து தாவும் அரசியல் புள்ளி இவரா? தவெக பக்கம் சாயும் அதிமுக கோட்டை -
மு.க.ஸ்டாலின் - எடப்பாடி பழனிசாமி இணைவார்கள்!ஆருடம் கணித்த.. ஆதவ் அர்ஜுனா! -
ஈரான் மக்களுக்கு விடிவுகாலம் பிறந்தது.. 87 நாட்களுக்கு பின்பு.. ஈரான் அதிபர் வெளியிட்ட அறிவிப்பு! -
இதெல்லாம் எந்த நினைப்பில் விஜய் செய்கிறார் தெரியலையே.. மிகப்பெரிய ரிஸ்க்.. சறுக்குனா காலிதான்! -
பயிர் கடன் தள்ளுபடியில் விஜய் வைத்த செக்.. 100%, 50% தள்ளுபடிக்கு பின் இருக்கும் ஸ்மார்ட் கணக்கு! -
ஸ்டாலின் கொண்டு வந்த காலை உணவு திட்டம் தொடரும்.. மெனு மாற்றம்.. அமைச்சர் ராஜ்மோகன் உறுதி












Click it and Unblock the Notifications