7 பேருக்கு மறுவாழ்வு கொடுத்த கோவை கல்லூரி மாணவர் – விபத்தில் இறந்தவர் உறுப்புகள் தானம்
கோவை: கோவை விபத்தில் மூளைச்சாவடைந்த இளைஞரின் உறுப்புகள் தானம் செய்யப்பட்டதால் 7 பேருக்கு மறுவாழ்வு கிடைத்துள்ளது.
கரூர் மாவட்டத்தை சேர்ந்தவர் வக்கீல் மோகன். இவரது மகன் அருண்குமரன், பொறியியல் கல்லூரி மாணவர்.
சம்பவத்தன்று அருண்குமரன் கரூர்- வேடச்சந்தூர் சாலையில் மோட்டார் சைக்கிளில் சென்றார். அப்போது எதிர்பாராதவிதமாக மற்றொரு மோட்டார் சைக்கிள் மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட அருண்குமரன் படுகாயம் அடைந்தார்.
அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு அருகில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது.
பின்னர் மேல் சிகிச்சைக்காக கோவை கே.எம்.சி.எச் மருத்துவமனையில் அருண்குமரன் அனுமதிக்கப்பட்டார். அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டும் அருண்குமரனின் உடல் நிலையில் முன்னேற்றம் ஏற்படவில்லை.
கடந்த 12 ஆம் தேதி அருண்குமரன் மூளைச்சாவு அடைந்தார். இது குறித்து அவரது குடும்பத்தினருக்கு தெரிவிக்கப்பட்டது. அதிர்ச்சியடைந்த பெற்றோர் மற்றும் உறவினர்கள் கதறி அழுதனர். மகனின் உடல் உறுப்புகளை தானமாக வழங்க பெற்றோர் சம்மதித்தனர்.
இதனையடுத்து நேற்று அருண்குமரனின் இதயம், 2 சிறுநீரகம், கண்கள், கல்லீரல் மற்றும் நுரையீரல் ஆகியவை அகற்றப்பட்டன. கண்கள் அரவிந்த் கண் மருத்துவமனைக்கு வழங்கப்பட்டது.
மற்ற அனைத்து உறுப்புகளும் அதே மருத்துவமனையில் அந்தந்த உறுப்புகள் பாதிக்கப்பட்டவர்களுக்கு பொறுத்தப்பட்டன. அருண்குமரனின் உறுப்பு தானத்தால் 7 பேர் மறுவாழ்வு பெற்றனர். இந்த சம்பவம் கோவை மற்றும் கரூர் பகுதியில் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.
-
கூட்டுறவு வங்கி நகைக்கடன் வாங்கியோருக்கு குட் நியூஸ்! பணம் கட்டலயா? ஏலத்திலிருந்து நகை மீட்க ஈஸி வழி -
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
"முதலமைச்சருக்கு நன்றி.. ஆனால்! எதிரியின் எதிரி நண்பனா? விஜய் ரசிகர்கள் குறித்து பேசிய அஜித் சகோதரர் -
வீரமணி ஒரே போடு.. திருச்சியில் முதலமைச்சர் விஜய் பேசிய அந்த பேச்சால் மொத்த பேருக்கும் முகச்சுளிப்பு? -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம் -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
கோவையில் அருவியாக மாறிய மேம்பாலம் .. மேட்டுப்பாளையம் ஊட்டி செல்லும் வழியில் மாறிய காட்சி -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
அரசியல் மோதலை விடுங்க.. 'கலைஞர்' கருணாநிதி பிறந்தநாளுக்கு முதல்வர் விஜய் போட்ட பதிவு!












Click it and Unblock the Notifications