கோவையில் மர்மநபர்கள் கைவரிசை- பூட்டிய வீட்டில் 45 சவரன் நகை கொள்ளை!

Posted By:
Subscribe to Oneindia Tamil

கோவை: வீட்டின் உரிமையாளர் ஊரில் இல்லாத சமயம் பார்த்து, கதவை உடைத்த மர்மநபர்கள் 45 சவரன் நகைகளை கொள்ளைடியத்து சென்றுள்ளனர்.

கோவையில் வெள்ளலூர் அடுத்த மகாலிங்கபுரம் எல்ஜி நகரை சேர்ந்தவர் ரவிச்சந்திரன் 45. இவர் தனது மகளுக்கு கடந்த சில நாட்களுக்கு முன்னர்தான் திருமணம் நடத்தி முடித்தார்.

Break the door of the house 45 Sovereign jewel robbery near Kovai

இந்நிலையில் தனது பெண்ணை கணவன் வீட்டில் விட்டு விடுவதற்காக அழைத்து சென்றதாக கூறப்படுகிறது. சம்பிரதாயங்கள் அனைத்தையும் முடித்துவிட்டு ரவிச்சந்திரன் இன்று காலை சொந்த ஊர் திரும்பியுள்ளார்.

அப்போது, வீட்டின் முன் பக்கம் மற்றும் பின்பக்க கதவு உடைக்கப்பட்டு கிடந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தார். பின்னர் உள்ளே சென்று பார்த்த போது, பீரோவில் வைத்திருந்த 45 சவரன் நகை மற்றும் திருமண பரிசு பொருட்கள் கொள்ளையடிக்கப்பட்டது தெரியவந்தது.

இந்த கொள்ளை சம்பவம் தொடர்பாக போத்தனூர் போலீசாரிடம் புகார் அளிக்கப்பட்டதன் அடிப்படையில் கொள்ளையர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
The door was broken and 45 sovereign jewels were looted near Kovai. The returning owner was shocked to see that the doors of his house were broken. Then when he went inside, the 45-soverign jewelry in the Biero was found looted. The police are investigating this.

நாள் முழுவதும் oneindia
செய்திகளை உடனுக்குடன் பெற