For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

தாய்லாந்து வேண்டாம் தாய்நாடே போதும்– திருமண மண்டபத்திலிருந்து ஓடிய மணப்பெண்!

Google Oneindia Tamil News

சென்னை: திருமணத்திற்குப் பின்னர் இந்தியாவை விட்டு தாய்லாந்திற்குச் செல்ல முடியாது என்று மணப்பெண் ஒருவர் மண்டபத்தை விட்டு ஓடிய சம்பவம் பெரும் பரபரப்பையும், கலகலப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

சென்னை மாதவரம் திருமலை நகரை சேர்ந்தவர் ஸ்ரீதர் . தாய்லாந்தில் வேலை பார்த்து வருகிறார்.

அதே மாதவரம் தணிகாசலம் நகரில் வசித்து வரும் பெண்ணுக்கும், இவருக்கும் கடந்த பிப்ரவரி 13 ஆம் தேதி திருமண நிச்சயதார்த்தம் நடந்தது.

திருமண ஏற்பாடுகள்:

பம்மலில் இருவருக்கும் நேற்று திருமணம் நடத்துவது என்று முடிவு செய்திருந்தனர். அதற்கான ஏற்பாடுகள் தடபுடலாக நடந்தது. நேற்று முன்தினம் காலையிலேயே உறவினர்கள் பலர் மண்டபத்துக்கு வந்துவிட்டனர்.

காணமல் போன மணமகள்:

இந்நிலையில் நேற்று முன்தினம் மதியம், வீட்டில் இருந்த மணமகளை காணவில்லை. இதனால், அதிர்ச்சியடைந்த பெற்றோர் மற்றும் உறவினர்கள் பல இடங்களில் அவரை தேடினர்.

அதிர்ச்சியடைந்த மணமகன்:

ஆனால், எங்கு தேடியும் அவர் கிடைக்கவில்லை. இதனால் மாப்பிள்ளை வீட்டாருக்கு மணமகளை காணவில்லை என்ற தகவல் தெரிவித்தனர். அவர்களும் அதிர்ச்சியடைந்தனர்.

போலீசில் புகார்:

இந்நிலையில் ஸ்ரீதரின் மாமா, மாதவரம் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிந்து, மணப்பெண்ணின் செல்போன் மூலம் தொடர்பு கொண்டனர். அப்போது அவர் எம்கேபி நகர் பாரதியார் நகரில் உள்ள முருகன் கோயிலில் இருப்பது தெரிந்தது.

தாய்லாந்து செல்ல விருப்பமில்லை:

அவரிடம் சென்று விசாரித்த போது தாய்லாந்து செல்ல எனக்கு பிடிக்கவில்லை. அதனால் இந்த திருமணத்தில் எனக்கு விருப்பம் இல்லை என கூறியுள்ளார்.

போலீசார் அறிவுரை:

இதையடுத்து அவரை சமாதானப்படுத்தி போலீசார், காவல் நிலையத்துக்கு அழைத்து வந்தனர். அவருக்கு அறிவுரை கூறி பெற்றோருடன் அனுப்பி வைத்தனர்.

திடீர் மணமகளான ஆசிரியை:

இதையடுத்து திருமணத்துக்கு வந்திருந்த புதுச்சேரியை சேர்ந்த உறவினர் மகளான ஆசிரியை ஒருவரிடம் பேசி அவரை சம்மதிக்க வைத்தனர். இதையடுத்து ஸ்ரீதருக்கும், ஆசிரியைக்கும் அதே மண்டபத்தில் திருமணம் நடந்தது. தம்பதிகள் மகிழ்ச்சியுடன் புதிய வாழ்க்கையை ஏற்றுக் கொண்டனர்.
டீச்சர் நீங்களாவது தாய்லாந்து போவீங்களா....?

English summary
Chennai bride groom refused to marriage the bride because she didn't want to go to Thailand.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X