“புல்” மப்பில் தள்ளாடிய குடிகர மாப்பிள்ளை- தாலி கட்டிக் கொள்ள மறுத்து திருமணத்தை நிறுத்திய மணப்பெண்!
சென்னை: சென்னையில் திருமணத்தின் போது மதுஅருந்தி தள்ளாடிய மாப்பிள்ளையை மணமகள் திருமணம் செய்துகொள்ள மறுத்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
திருக்கழுக்குன்றம் அடுத்த ஈச்சங்கரனை கிராமத்தை சேர்ந்தவர் சபாபதி. இவருக்கும் கல்பாக்கம் அடுத்த புதுப்பட்டினம் பகுதியை சேர்ந்த பெண்ணுக்கும் திருமணம் முடிவு செய்யப்பட்டிருந்தது.
நேற்று முன்தினம் வரவேற்பு நிகழ்ச்சிகள் நடந்தது. மாப்பிள்ளையும், மணமகளும் தங்கள் உறவினர்களுடன் சேர்ந்து சிரித்தபடியே போட்டோவும் எடுத்து கொண்டனர்.
அதன் பிறகு இரவு இரண்டுபேரும் உட்கார்ந்து சாப்பிட்டனர். அதுவும் போட்டோ எடுக்கப்பட்டது. நேற்று திருக்கழுக்குன்றத்தில் உள்ள ஒரு திருமண மண்டபத்தில் காலை திருமணம் நடக்க இருந்தது.
தாலி கட்டுவதற்கு முன்பாக சில சடங்குகளுக்காக மணமகள், தன் பெற்றோருடன் மணமேடையில் காத்திருந்தார். ஆனால், இரவு நண்பர்களுடன் சேர்ந்து மாப்பிள்ளை சபாபதி ஓவராக குடித்துள்ளார். அதே சடங்கிற்காக மணமகனை அழைத்து வரச் சென்ற பெற்றோர் வர நீண்ட நேரம் ஆனது.
மாப்பிள்ளையும் வரவில்லை. அவரை அழைத்து வரச் சென்ற அவரின் பெற்றோரும் வரவில்லை. ஆனால், மணமேடையில் இருந்த புரோகிதரோ, "நேரம் ஆகிறது. மாப்பிள்ளையை சீக்கிரம் அழைத்து வாங்கோ" என்று நச்சரித்து கொண்டே இருந்தார்.
உடனே மாப்பிள்ளை இருந்த அறைக்கு மணமகள் தன் உறவினர்களுடன் சென்றபோது, ஓவர் குடியில் நிற்க முடியாமல் தடுமாறிக் கொண்டிருந்தார். அவரை நிற்க வைக்கும் முயற்சிகள் அனைத்தும் தோல்வியில் முடிந்தது.
இந்த காட்சியை பார்த்த மணமகள் லதா, தாலி கட்ட கூட எழுந்திருக்க முடியாத நிலையில் உள்ள மாப்பிள்ளையை திருமணம் செய்ய மாட்டேன் என்று கூறிவிட்டார்.
இந்நிலையில், இரு வீட்டாரிடையே வாக்கு வாதம் ஏற்பட்டது. இந்த சண்டை ரோடு வரை சென்றது. இதனால் தகவல் அறிந்த திருக்கழுக்குன்றம் போலீசார் அங்கு சென்று இரு தரப்பினரையும் சமரசம் செய்து வைத்தனர்.
எனினும் இரு வீட்டாரும் சமாதானம் அடையாத நிலையில், மணமகன் வீட்டார் மீது திருக்கழுக்குன்றம் காவல் நிலையத்தில் பெண் வீட்டார் புகார் செய்தனர். அதன் பேரில் எஸ்.ஐ கிருஷ்ணமூர்த்தி இந்த புகார் மீது இரு தரப்பினரிடமும் விசாரணை செய்து வருகிறார்.
-
Low Pressure: காற்றழுத்த தாழ்வு பாதையால் நடக்கும் மேஜிக்! தென் கடலோர மாவட்டங்களில் பிச்சு உதறப் போகுது மழை! -
தங்கம் ரூ.3000, வெள்ளி ரூ.14000 சரிவு.. மீண்டும் பல்டி அடித்தால் மக்கள் கொண்டாட்டம்..! -
யூடியூபரை பார்க்க கோவை டூ சென்னை.. 4 பள்ளி மாணவிகள் செயல்.. பெற்றோர் அறிய வேண்டிய பாடம் -
இன்று முதல் அடுத்த ஒரு வாரத்துக்கு மழை பிச்சு உதறும்..தென் தமிழகத்திற்கு அலர்ட் கொடுத்த வானிலை மையம் -
Gold Price: தலைகீழாக குறைந்த தங்கம் விலை.. ஒரே நாளில் 2 முறை அதிரடியாக சரிந்தது! நகை பிரியர்கள் குஷி -
பஞ்சாப் அண்ட் சிந்து வங்கியில் வேலை.. டிகிரி + தமிழ் தெரிஞ்சா ஜாக்பாட்! மாதம் 85 ஆயிரம் சம்பளம்! -
பல லட்சம் ஊழியர்களுக்கு.. அடுத்தடுத்து கணக்கில் வரும் ரூ.3000.. யாருக்கு கிடைக்கும்? என்ன காரணம்? -
இரண்டாக உடையும் வானம்.. இடி, மின்னலுடன் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
மூட்டை மூட்டையாக போய் தங்கத்தை அடகு வைக்கும் மக்கள்.. வெளியான ஷாக் தகவல்.. இப்படி ஒரு காரணமா? -
பத்திரப்பதிவில் இன்று முதல் புதிய ரூல்ஸ்! அதிகரிக்கும் சொத்து பதிவு செலவு! கலங்கும் நடுத்தர மக்கள் -
அந்த பேச்சு பேசின ஆதவ் அர்ஜுனா.. வில்லிவாக்கம் சம்பவத்தில் வாய் திறக்கலயே! கப்சிப் தவெக! -
ஏப்ரல் 1ம் தேதியான இன்று சம்பளம், கடன் எதுவுமே சாத்தியமில்லை... மக்கள் அறிய வேண்டிய உண்மை












Click it and Unblock the Notifications