விவசாயிகள் போராட்டத்திற்கு ஆதரவளித்த பிரிட்டன் எம்பி.. ஏர்போர்ட்டில் தடுத்து வைப்பு.. பஞ்சாபில் பரபர
அமிர்தசரஸ்: வேளாண் சட்டங்களை எதிர்த்து விவசாயிகள் நடத்திய போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்த பிரிட்டன் எம்பி தன்மன்ஜீத் சிங் தேசி, நேற்று பஞ்சாப் வந்திருந்த நிலையில் அமிர்தசரஸ் விமான நிலையத்தில் சுமார் 2 மணி நேரம் வரை தடுத்து வைக்கப்பட்டிருந்துள்ளார். இந்த சம்பவம் விவாதங்களை ஏற்படுத்தியுள்ளது.
மத்திய பாஜக அரசு கொண்டு வந்த மூன்று வேளாண் சட்டங்களை எதிர்த்து நாடு முழுவதும் பெரும் போராட்டங்கள் நடைபெற்றன. டெல்லியில் தொடங்கிய இந்த போராட்டம் பல்வேறு மாநிலங்களில் தீவிரமாக நடைபெற்றது. டெல்லியில் நடந்த போராட்டங்களில் பஞ்சாப், ஹரியானாவை சேர்ந்த விவசாயிகள் அதிக அளவு பங்கேற்றிருந்தனர். இந்த போராட்டத்திற்கு சர்வதேச அளவில் ஆதரவும் கிடைத்தது. இந்த ஆதரவாளர்கள் பட்டியலில் தன்மன்ஜீத் சிங்கும் ஒருவர்.

பிரிட்டன் எம்பியான இவர் இந்த போராட்டத்திற்கு பகிரங்கமாக தன்னுடைய ஆதரவை அளித்திருந்தார். இதனால் ஏராளமான குற்றச்சாட்டுகளுக்கு உள்ளானார். அதாவது, இவரை காலிஸ்தான் ஆதரவாளர் என்று பாஜகவினர் கடுமையாக விமர்சித்தனர். "காஷ்மீர் விவகாரத்திலும் சரி, விவசாயிகள் பிரச்னைகளிலும் சரி அவர் இந்தியாவுக்கு எதிரான கருத்துக்களை தொடர்ந்து கூறி வருகிறார். அவர் காலிஸ்தான் இயக்கங்களுடன் நெருங்கிய தொடர்பை கொண்டிருக்கிறார்" என்று பாஜக தலைவர்கள் கடுமையாக விமர்சித்திருந்தனர்.
இந்நிலையில் அவர் நேற்று பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸுக்கு வந்தார். காலை 9 மணிக்கு ஏர்போர்ட்டில் வந்திறங்கிய அவரை அப்படியே குடியேற்ற அதிகாரிகள் அலேக்காக வேறு ஒரு அறைக்கு அழைத்து சென்றனர். பின்னர் சுமார் 11 மணிக்குதான் அவர் வெளியில் அனுப்பப்பட்டிருக்கிறார். ஆனால் எதற்காக இவர் தடுத்து வைக்கப்பட்டார்? என்பதற்கான எந்த காரணமும் இதுவரை சொல்லப்படவில்லை. குடிவரவு அதிகாரிகள் உள்துறை அமைச்சகத்தின் கீழ் இயங்குகின்றனர்.
இந்நிலையில், டிவிட்டரில் தான் தடுத்து வைக்கப்பட்டிருந்தது தொடர்பாக கடுமையான விமர்சனத்தை தன்மன்ஜீ்த் சிங் தெரிவித்துள்ளார். அதாவது, "எனது விசாவை ரத்து செய்ய சிலர் கூறியிருந்தனர். விவசாயிகள், விளிம்புநிலை மக்கள் மற்றும் சீக்கியர்கள் போன்ற சிறுபான்மையினர் பக்கம் நிற்பதற்காக செலுத்த வேண்டிய விலை இது" என்று ட்வீட் செய்திருக்கிறார். இந்த சம்பவம் பஞ்சாப் மாநிலத்தில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. முன்னதாக தன்மன்ஜீத் சிங் எப்போது பஞ்சாப் வந்தாலும் விவசாயிகள் சார்பில் அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
-
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம்












Click it and Unblock the Notifications