புதுக்கோட்டையில் விரைவில் அகல ரயில் பாதை பணி தொடங்கும் - ரயில்வே மேலாளர் சுனில்குமார் தகவல்!
புதுக்கோட்டை: புதுக்கோட்டையில் விரைவில் அகல ரயில பாதையாக மாற்றும் பணி தொடங்கும் என்று அமமாவட்ட ரயில்வே கோட்ட மேலாளர் தெரிவித்துள்ளார்.
புதுக்கோட்டை ரயில்வே நிலையத்தை மதுரை ரயில்வே கோட்ட மேலாளர் சுனில்குமார் கார்கே முதுநிலை கோட்ட இயக்க மேலாளர் செந்தில்குமார் உள்ளிட்ட ரயில்வே அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.

ரயில்வே நிலையத்தை பாதுகாப்பு பணிகள் எவ்வாறு செய்யப்பட்டுள்ளது. ரயில்வே லெவல் கிராசிங்கில் முறையாக பணியாளர்கள் பணியாற்றுகிறார்களா என்பது குறித்து புதுக்கோட்டை ரயில்வே அதிகாரிகளிடம் கேட்டறிந்தனர். இதன்பின்னர் ரயில தண்டவாளங்களின் தரம் குறித்து ரயிலில் ஆய்வு மேற்கொண்டனர்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய சுனில்குமார் கார்கே, "இது ஒரு வழக்கமான பாதுகாப்பு ஆய்வுதான். மேலும் மாவட்டத்தில் உள்ள பயன்படாத லெவல் கிராசிங்க்குளை மூடுவதற்கும் புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியரோடு ஆலோசனை நடைபெற்றது. மேலும் இதேபோன்று புதுக்கோட்டையில் இரண்டு இடங்களில் ரயில்வே மேம்பாலம் அமைக்க வேண்டும் என்பது குறித்தும் ஆட்சியரிடம் ஆலோசனை நடத்தப்பட்டது. இது குறித்து 2வார காலத்திற்குள் அறிக்கை அனுப்பி வைப்பதாக ஆட்சியர் கூறியுள்ளார்.
தஞ்சை-அறந்தாங்கி-காரைக்குடி ரயில்பாதையில் அகல ரயில்பாதையாக மாற்றும்பணி தாமதாகமாக நடந்து வருவதற்கு நிதி பற்றாக்குறையே காரணம். பண்டிகை காலங்களில் பொதுமக்களின் கூட்ட நெரிசலை தவிர்ப்பதற்கு மதுரை கோட்ட்டததில் உள்ள ரயில்களில் கூடுதல் பெட்டி இணைக்கப்படும். மதுரை கோட்டத்தில் புதிய ரயில்கள் விட வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர். ஆனால் இது குறித்து தென்னக ரயில்வே மற்றும் ரயில்வே போர்டு தான் முடிவு எடுக்க வேண்டும்.
மதுரை கோட்டத்தில் அனைத்து ரயில்தடங்களும் அகல ரயில் பாதையாக மாற்றப்பட்டுள்ளது. தற்போது மதுரை-தேனி-போடிநாயக்கனூர் பணிகள் இதே போன்று செங்கோட்டை-புனலூர் ரயில் பாதை அகல ரயில் பாதையாக விரைவில் மாற்றும் பணி தொடங்கும்.
தற்போது புதுக்கோட்டை ரயில்வே நிலையம் பி கிரேடாக உள்ளது. ஏ கிரேடாக தரம் உயர்த்துவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. 2016-17ம் ஆண்டில் புதுக்கோட்டை ரயில் நிலையம் ஏ கிரேடாக தரம் உயர்த்தப்படும் என்ற நம்பிக்கை உள்ளது. இதே போன்று புதுக்கோட்டை ரயில்வே நிலையத்தில்மூடப்பட்டுள்ள ஏடிஎம் மையத்தை வங்கிகளில் பேசி மீணடும் திறப்பதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்படும். மேலும் புதுக்கோட்டையில் ரயில் நிலையத்தில் அடிப்படை வசதிகளை மேம்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும்" என்று தெரிவித்துள்ளார்.
-
வேளச்சேரி - பரங்கிமலை MTRS.. 80 நிமிடப் பயணம் வெறும் 15 நிமிடம்.. எஸ்ஜி சூர்யாவின் நிஜ அனுபவம் -
சர்க்கரை அட்டைதாரர்களுக்கு சூப்பர் வசதி… ரேஷன் கடைக்கு போறீங்களா? தமிழக அரசின் திடீர் உத்தரவு -
தமிழ் புத்தாண்டு பலன்: கன்னி ராசிக்கு 100 மார்க்.. ரேஞ்சே மாறப்போகுது.. பொற்காலம் ஆரம்பம் -
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு -
பிள்ளையை கிள்ளி விட்ட இஸ்ரேல்.. தொட்டிலை ஆட்டும் அமெரிக்கா! வெறி கொண்டு அடிக்கும் ஈரான்.. குண்டு மழை -
உளவுத்துறை சொன்னது என்ன? 155 சீட் பின்னணியில் அமித்ஷா தந்த கிரீன் சிக்னல்! எடப்பாடி முகம் பிரகாசம் -
3 அமைச்சர்களை எதிர்க்கும் தமாக! அதிமுக – பாஜக வழங்கிய தொகுதியை கவனிச்சீங்களா.. 5 தொகுதியும் கடினம் -
கரண்ட் பில் இலவசம்? இனி கட்ட வேண்டாமா? மத்திய அரசு ₹78,000 மானியம்! உங்க வீட்டிற்கு எப்படி வாங்குவது -
பிடுங்கப்படும் டிரம்பின் பவர்! அதிபர் பதவியிலேயே இருந்தாலும் அதிகாரம் இருக்காது.. நிலைமை மோசம்! -
நல்ல காலம் பொறக்குது.. தங்கம், வெள்ளியை முடிஞ்ச அளவு வாங்குங்க! ‘கோல்டுமேன்’ அடுக்கும் காரணங்கள்! -
மருமகள் உள்ளே, சீனியர் வெளியே? 55 கால சாம்ராஜ்ஜியத்திற்கு செக்! காட்பாடி திருப்பத்தின் பின்னணி என்ன -
இரட்டை இலையை விட்டுவிட்டு.. தாமரைக்கு தாவும் கூட்டணி கட்சிகள்! எங்கேயோ இடிக்குதே!












Click it and Unblock the Notifications