திருச்செந்தூர் கடற்கரைப் பகுதியில் உடைந்த சாமி சிலைகள்... பக்தர்கள் அதிர்ச்சி!
தூத்துக்குடி: திருச்செந்தூர் கடற்கரைப் பகுதியில் உடைந்த சாமி சிலைகள் கிடந்ததால் பக்தர்கள் அதிர்ச்சியில் உள்ளனர். இதுகுறித்து திருச்செந்தூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடான திருச்செந்தூருக்கு அதிக. அளவில் உள்ளூர், மற்றும் வெளியூர் சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். ஆனால் சமீப காலமாக பக்தர்களை வேதனைக்குள்ளாக்கும் சம்பவங்கள் அடிக்கடி நடந்து வருகின்றன. குறிப்பாக பல்வேறு ஊர்களில் உள்ள கோயில்களில் உடைந்த சுவாமி சிலைகளை எடுத்து வந்து இரவோடு, இரவாக திருச்செந்தூர் கடற்கரையில் போட்டு விட்டு செல்கின்றனர். பக்தர்கள் கடலில் நீராடும் இடங்களில் சுவாமி சிலைகள் கிடப்பதால் அவற்றின் மீது குழந்தைகள் ஏறி விளையாடூவதும், மணல்களை அள்ளி போட்டு மூடுவதுமாக இருக்கின்றனர். இது பக்தர்களிடையே வேதனையை ஏற்படுத்தி உள்ளது.
இதுகுறித்து திருச்செந்தூரை சேர்ந்த பாஜக துணை தலைவர் செந்தில்வேல் கூறுகையில்,
கோயில்களில் சிலைகள் உடைந்து சிதிலமடைநது போய் விட்டால் அதை அங்கே வைத்து வழிபாட மாட்டார்கள். அப்படி அகற்றப்படும் சிலைகளை ஆழ் கடல் பகுதிகள், குளங்கள் மற்றும் நீர் நிலைகளில் போடுவது வழக்கம். ஆனால் திருச்செந்தூர் கடற்கரையில் கடந்த சில நாட்களாக உடைந்த சுவாமி சிலைகள் அதிக அளவில் காணப்படுகிறது. இவற்றை கொண்டு வருபவர்கள் கடலில் போடாமல் கரையில் போட்டு விட்டு செல்கின்றனர். இதை கோவில் நிர்வாகம் கண்காணிக்க வேண்டும் என கூறினார்
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications