அதெப்படி எனக்கு அட்வைஸ் பண்ணலாம்? கோவை பேராசிரியரை சரமாரியாக வெட்டி படுகொலை செய்த 'சகலை'!
கோவை: அறிவுரை கூறிய பேராசிரியரை அவரது சகலையே வெட்டிக் கொன்ற சம்பவம் கோவையில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஈரோடு மாவட்டம் கோபிச்செட்டிபாளையம் அருகிலுள்ள வெள்ளாள பாளையத்தைச் சேர்ந்தவர் கார்த்திகேயன். இவர் மனைவி சசிரேகா. இவர்களுக்கு ஏழு வயதில் ஒரு ஆண் குழந்தை உள்ளது. இவர் கோவை சாய்பாபா காலனியில் உள்ள ராமலிங்கம் காலனி என்ற பகுதியில் குடும்பத்துடன் வசித்து வருகிறார். கார்த்திகேயன், இங்குள்ள ஒரு தனியார் பொறியியல் கல்லுாரியில் விரிவுரையாளராக பணியாற்றுகிறார். இவரது மனைவியும், பெண்கள் கல்லுாரி பேராசிரியராக பணியாற்றுகிறார்.
சத்தியமங்கலம் அருகிலுள்ள சுண்டப்பாளையத்தில் சசிரேகாவின் அக்கா அனிதாவும் அவரது கணவர் மகேஸ்வரன் என்பவரும் வசிக்கின்றனர். இருவரும், பண்ணாரியம்மன் கல்லுாரியில் அலுவலக உதவியாளராக பணியாற்றுகின்றனர். இவர்களுக்கு இரண்டு மகள்கள் உள்ளனர். மகேஸ்வரன் உடல்நிலை சரியில்லாமல் உள்ளதாகவும், இதனால் தற்போது வேலைக்கு போகாமல் வீட்டிலேயே இருப்பதாகவும் இதனால் நிறைய கடன் வாங்கியுள்ளதாகவும் தெரிகிறது.
இந்நிலையில் மருத்துவமனையில் சேர்ந்து சிகிச்சை பெறுவதற்காக நேற்று முன்தினம் அனிதா தனது கணவர் மகேஸ்வரனை அழைத்துக்கொண்டு கோவை வந்துள்ளார். அங்கு தங்கை வீட்டில் தங்கிக்கொண்டு மருத்துவமனைக்குச் சென்று வந்துள்ளனர். குடும்ப பிரச்சனைகள் தொடர்பாக நேற்று முன்தினம் அனைவரும் விவாதித்துள்ளனர். இதில் மகேஸ்வரனுக்கு பேராசிரியர் கார்த்திகேயன் அறிவுரை கூறியுள்ளார். ஆனால் மகேஸ்வரன் இதை ஏற்காமல் கார்த்திகேயன் மீது கோபமடைந்துள்ளார்..
இந்த நிலையில்தான் நள்ளிரவு 1:30 மணிக்கு வீட்டிலிருந்த அரிவாளை எடுத்து துாங்கிக்கொண்டிருந்த கார்த்திகேயனையும் அவரது மனைவி சசிரேகாவையும் மகேஸ்வரன் சரமாரியாக வெட்டினார்.
இதில் கார்த்திகேயன் சம்பவ இடத்திலேயே பலியானார். காயமுற்ற அவரது மனைவி, கோவை மேட்டுப்பாளையம் சாலையில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளார். மகேஸ்வரனை போலீசார் கைது செய்துள்ளனர். மாமனார் வீட்டில் சகலை கார்த்திகேயனுக்கே அதிக முக்கியத்துவம் கொடுப்பதால் தாம் ஆத்திரத்தில் கொலை செய்ததாக அவர் வாக்குமூலம் கொடுத்துள்ளார்.
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்!












Click it and Unblock the Notifications