கொலை செய்வதாக மிரட்டி இளம்பெண் பலாத்காரம் – கிருஷ்ணகிரியில் அண்ணன், தம்பி கைது
கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரியில் இளம்பெண் ஒருவரை கொலை செய்வதாக மிரட்டி இரண்டு மாதங்களாக பலாத்காரம் செய்த அண்ணன், தம்பி போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கிருஷ்ணகிரி மாவட்டம் கெலமங்கலம் அருகே உள்ள குந்துமாரகப்பள்ளி பகுதியை சேர்ந்தவர் கல்யாணி (பெயர் மாற்றப்பட்டுள்ளது). இவர் மனநிலை பாதிக்கப்பட்டவர் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த நிலையில் இவர் நேற்று முன்தினம் காலையில் வீட்டை விட்டு சென்றார். அதன் பிறகு அவர் நீண்ட நேரம் கழித்து வீட்டுக்கு வந்தார். அப்போது அவர் மிகவும் சோர்வாக காணப்பட்டார். மிகவும் களைப்பாக இருந்தார்.

இதனால் பதட்டம் அடைந்த அவரது தாய், மகள் கல்யாணியிடம் ஏன் வீட்டுக்கு வர இவ்வளவு தாமதமாகியுள்ளது என்றும், ஏன் மிகவும் சோர்வாக காணப்படுகிறாய் என்றும் கேட்டார்.
அப்போது அவர் குந்துமாரன பள்ளியை சேர்ந்த கில்லப்பா என்பவரின் மூத்த மகன் ராமமூர்த்தி, 2 ஆவது மகன் முனிராஜ் ஆகிய 2 பேரும் சேர்ந்து ஊர் பக்கத்தில் உள்ள மறைவான இடத்திற்கு தன்னை கொண்டு சென்றனர்.
அங்கு வைத்து 2 பேரும் சேர்ந்து தன்னை மிரட்டி மாறி, மாறி பலாத்காரம் செய்தனர். இதனை பற்றி வெளியில் யாரிடமாவது சொன்னால் உன்னை கொலை செய்து விடுவோம் என்றும் மிரட்டினர்.
இதேபோல் 2 பேரும் சேர்ந்து தொடர்ந்து மிரட்டி கடந்த 2 மாதங்களாக தன்னை பலாத்காரம் செய்து வந்தனர் என்று தாயிடம் கண்ணீர் மல்க கதறி அழுதவாறு கூறினார்.
இதனை கேட்டு அதிர்ச்சி அடைந்த அவரது தாய் தேன்கனிக்கோட்டை அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து, வாலிபர் ராமமூர்த்தி, அவரது தம்பி முனிராஜ் ஆகிய 2 பேரையும் கைது செய்து விசாரணை நடத்தினர்.
விசாரணையில் இளம்பெண் கல்யாணியை 2 பேரும் சேர்ந்து கடந்த 2 மாதங்களாக தொடர்ந்து பலாத்காரம் செய்து வந்தது உண்மை என தெரிய வந்தது.
இதையடுத்து போலீசார் அவர்கள் 2 பேரையும் போச்சம்பள்ளி ஜே.எம்.1 நீதிபதி முன்பு ஆஜர்படுத்தினர். ஜே.எம்.1 நீதிபதி 15 நாள் காவலில் அண்ணன், தம்பி பேரையும் சிறையில் அடைக்க உத்தரவிட்டார்.
அதன்படி அவர் ஓசூர் கிளை சிறைக்கு கொண்டு சென்று அங்கு அடைக்கப்பட்டார். இளம்பெண்ணை பலாத்காரம் செய்த வாலிபர் ராமமூர்த்தி டிராக்டர் டிரைவர் ஆவார். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications