மாமல்லபுரம் பக்கிங்காம் கால்வாய் பாலம் உடையும் அபாயம்... வாகனங்கள் செல்ல தடை
மாமல்லபுரம்: சென்னை மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் பெய்த கனமழை காரணமாக பக்கிங்காம் கால்வாயில் வெள்ளம் கரை புரண்டு ஓடுகிறது. இதனால் அந்த பாலத்தின் வழியாக கனரக வாகனங்கள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.
கடந்த சில நாட்களாக பெய்த கனமழையால் இந்த பாலத்தின் பல இடங்களில் உடைப்பு ஏற்பட்டுள்ளது. மாமல்லபுரத்தில் இருந்து கிழக்கு கடற்கரை சாலையை இணைக்கும் பக்கிங்காம் கால்வாய் பாலத்தின் வழியாக தென் மாவட்டங்களுக்கு பேருந்துகள் இயக்கப்படுகின்றன.

மேலும், செங்கல்பட்டு, திருக்கழுக்குன்றம், காஞ்சீபுரம், வேலூர் ஆகிய பகுதிகளில் இருந்து வரும் சுற்றுலா பேருந்துகள், மற்றும் லாரிகள் இந்தப் பாலத்தின் வழியாகவே வந்து செல்கின்றன. பக்கிங்காம் கால்வாயில் கரை புரண்டு ஓடும் காட்டாற்று வெள்ளம் அகல்பாக்கம் முகத்துவாரம் வழியாக கடலில் கலக்கிறது.
ஓடும் நீரின் அளவு மிக வேகமாக உள்ளதால் பாலத்தின் ஒரு பகுதி அரிக்கப்பட்டு உடையும் நிலையில் உள்ளது. இதனையடுத்து காஞ்சீபுரம் மாவட்ட ஆட்சியர் உத்தரவின்பேரில் அதிகாரிகள் இந்த பாலத்தை பார்வையிட்டு ஆய்வு செய்தனர். பாலத்தின் ஒரு பகுதி உடையும் நிலையில் இருப்பதை உறுதி செய்த அதிகாரிகள் பக்கிங்காம் பாலத்தில் போக்குவரத்து செல்ல தடை விதித்தனர்.
இதையடுத்து மாமல்லபுரம் போக்குவரத்து போலீசார், பக்கிங்காம் பாலத்தில் தற்காலிக தடுப்புகள் அமைத்து வாகனங்கள் செல்ல தடை விதித்தனர். மாமல்லபுரம் வரும் அரசு பஸ்கள் மற்றும் லாரிகள் அனைத்தும், ‘பைபாஸ்' சாலை வழியாக நகருக்குள் செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளது.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications