இடிந்த 11 மாடி கட்டடத்திற்கு அருகில் இருக்கும் அடுக்குமாடி கட்டடம் இடிக்கப்படுகிறது?
சென்னை: சென்னை மவுலிவாக்கத்தில் இடிந்து விழுந்த 11 அடுக்குமாடி கட்டத்திற்கு அருகில் உள்ள 11 மாடி கட்டடம் இடிக்கப்படக்கூடும் என்று கூறப்படுகிறது.
சென்னை மவுலிவா்க்கத்தில் 11 மாடிகள் கொண்ட இரட்டை குடியிருப்பு கட்டடங்கள் கட்டப்பட்டு வந்தன. இந்நிலையில் அதில் 1 கட்டடம் இடிந்து விழுந்ததில் 18 பேர் பலியாகினர். இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் கட்டுமான உரிமையாளர்கள் 2 பேர், என்ஜினியர்கள் 4 பேர் என மொத்தம் 6 பேரை கைது செய்துள்ளனர்.

இந்த இரட்டை கட்டடங்கள் கட்டப்பட்டுள்ள இடம் முன்பு குளமாக இருந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. குளத்தில் மண்ணை போட்டு மூடி கட்டடங்களை கட்டியுள்ளனர். இந்நிலையில் இடிந்த கட்டடத்திற்கு அருகில் உள்ள 11 மாடி கட்டடம் இடிக்கப்படலாம் என்று கூறப்படுகிறது.
இதற்கிடையே கட்டடம் இடிந்த இடத்தில் இடிபாடுகளை அகற்ற மெட்ரோ ரயில் நிர்வாகம் உதவியது. மெட்ரோ நிர்வாகம் சம்பவ இடத்திற்கு 2 கிரேன்கள், 10 லாரிகள் மற்றும் தொழில்நுட்ப நிபுணர்களை அனுப்பி வைத்தது என்பது குறிப்பிடத்தக்கது.
-
தலைமை செயலக பகுதியில் திடீரென புகை மூட்டம்! மூச்சுத்திணறலால் பொதுமக்கள் அவதி.. சென்னையில் பரபரப்பு -
கோயம்பேடு மதுபான பாரில் யான்சிக்கு என்ன நடந்தது.. பெண்ணுடன் சென்ற இளைஞர் வீடியோவில் விளக்கம் -
தமிழகத்தில் இன்று 21 மாவட்டங்களில் கனமழை வெளுக்கும்.. சென்னைக்கும் அலர்ட் விடுத்த வானிலை ஆய்வு மையம் -
மணப்பாக்கம் - சென்னையின் புதிய ஹாட்ஸ்பாட்.. புறநகரை நோக்கி படையெடுக்கும் சென்னை இளசுகள்! -
சென்னையில் இன்று இடி, மின்னலுடன் மழை கொட்டப் போகுது.. தமிழகம் முழுக்க 22 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை -
சிறுசேரியில் சம்பவம் செய்யும் கேப்ஜெமினி.. ரூ.1,000 கோடி முதலீடு எதற்காக தெரியுமா? -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
வள்ளுவருக்கு காவி சாயம்.. பதிலளிக்காமல் சென்ற அமைச்சர் செங்கோட்டையன்! வெடிக்கும் விமர்சனம் -
ஆளுநரின் தனி செயலாளர் உட்பட.. தமிழகம் முழுவதும் ஐஏஎஸ் அதிகாரிகள் பலர் பணியிட மாற்றம்! -
இடியை இறக்கும் ஆயில் நிறுவனங்கள்.. சென்னையில் வணிக கேஸ் சிலிண்டரின் விலை ரூ.46 உயர்வு! -
ஆம்னி பஸ் மாதிரியே.. சென்னைக்கு வரும் விமானங்களில் கட்டணம் 3 மடங்கு உயர்வு! மக்கள் ஷாக் -
திடீரென இடிந்து விழுந்த 5 மாடி கட்டடம்.. இடிபாடுகளுக்குள் பலர் சிக்கியிருக்க சான்ஸ்.. டெல்லி சோகம்












Click it and Unblock the Notifications