ஒகேனக்கல் மலைப் பாதையில் பஸ் கவிழ்ந்து 7 பேர் பலி - 30க்கும் மேற்பட்டோர் காயம்
ஒகேனக்கல்: ஒகேனக்கல் மற்றும் திண்டுக்கல் பகுதிகளில் நடைபெற்ற இரண்டு விபத்துகளில் 9 பேர் உயிரிழந்துள்ளனர்.
தர்மபுரியிலிருந்து அஞ்செட்டிக்கு இன்று அரசுப் பேருந்து ஒன்று சென்று கொண்டிருந்தது. அப்போது, ஒகேனக்கல் அருகே கணவாய் என்ற இடத்தில் மலைப்பாதையின் வளைவில் பேருந்து திரும்பியபோது, 30 அடி பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் 7 பேர் பலியானார்கள். டிரைவரின் கட்டுப்பாட்டை பேருந்து இழந்ததால் இந்த விபத்து ஏற்பட்டதாக தெரிகிறது.

விபத்தில் இதுவரை 7 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல்கள் கூறுகின்றன. பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் அபாயம் இருப்பதாக கூறப்படுகிறது. 30க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்துள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. காயமடைந்தவர்களில் பலரது நிலை கவலைக்கிடமாக உள்ளது.

மீட்புப் பணிகள் முடிவடைந்த நிலையில் 29 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மேலும், மக்களே மீட்புப் பணியில் ஈடுபட்ட நிலையில் 108 ஆம்புலன்ஸ் தாமதமாக வந்ததாக புதிய பூகம்பம் கிளம்பியுள்ளது.
தை அமாவாசைக்காக ஒகேனக்கல் வந்தவர்களும், மற்ற பயணிகளும் இதில் அடங்குவர். அதிக பயணிகளை ஏற்றியதே இதற்கு காரணம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

பென்னாகரம் மற்றும் தர்மபுரி மருத்துவமனைகளில் பயணிகள் சேர்க்கப்பட்டுள்ளனர். அதிக அளவிலான காயமடைந்தவர்கள் தர்மபுரி அரசுக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். கிட்டதட்ட 250க்கும் மேற்பட்ட மருத்துவமனைப் பணியாளர்கள் முதலுதவியில் ஈடுபட்டுள்ளனர்.
மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டவர்களில் மேலும் மூன்று பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அரசுப் பேருந்து ஓட்டுநரின் நிலைமையும் கவலைக்கிடமாக உள்ளது.

பேருந்தானது முழுவதுமாக நொறுங்கிய நிலையில், தீயணைப்பு படையினர் சேதமடைந்த வாகனங்களை மீட்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

அதேபோல், திண்டுக்கல் - கரூர் சாலையில் சென்றுகொண்டிருந்த கார் ஒன்று தனது கட்டுப்பாட்டை இழந்தது. கட்டுப்பாட்டை இழந்த கார், மற்றொரு கார் மீது மோதியது.

இதில் சம்பவ இடத்திலேயே இருவர் உயிரிழந்தனர். 4 பேர் படுகாயம் அடைந்தனர். படுகாயம் அடைந்த 4 பேரும் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
-
Vijay Sangeetha Divorce: சிஎம்-ஆவே இருந்தாலும் நேரில் தான் வரனும்.. வீடியோ கான்ஃப்ரன்ஸ் கோரிக்கையை நிராகரித்த நீதிமன்றம் -
மூட்டை முடிச்சை கட்டிக்கிட்டு பெங்களூர், ஹைதராபாத் போக வேண்டியதுதான்.. பின்னோக்கி செல்லும் சென்னை! -
தவெக அமைச்சரவையில் இருந்து எந்நேரத்திலும் வெளியேறுவோம்.. திருமாவளவன் கருத்துக்கு வன்னி அரசு விளக்கம் -
“செல்போனால் ஒரு மாநிலமே போய்விட்டது” - நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனின் பேச்சால் சலசலப்பு! -
தவெகவின் வெற்றி தொலைக்காட்சி ஆரம்பம்.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு.. நாஞ்சில் சம்பத் வாழ்த்து -
"சாக்கடையில் இருக்க வேண்டியது.." கரப்பான் பூச்சி கட்சி குறித்து பவன் கல்யாண் சொன்ன கருத்து -
6400 கி.மீ ரஷ்யா, 7200 கி.மீ ஆப்பிரிக்காவை விட நீளமானது என்று கூகுள் மேப்ஸ் எப்படி நம்ப வைக்கிறது? -
மனோஜ் மனைவி தனியாக வாழ காரணம் இதுதான்.. "இதை” நம்பி தான் இருக்கிறாங்க! பாரதிராஜா தம்பி உருக்கம் -
டிடிவி பராக்.! இரட்டை இலை என்னோடது.. அமித் ஷாவிடம் டீல் பேசிய அண்ணன்! எடப்பாடிக்கு எகிறும் பிரஷர்! -
கிளம்பு, கிளம்பு.. போர் முடிஞ்சிப்போச்சு.. டிரம்ப் அறிவித்த 'அந்த' ஒரு விஷயம்.. ஈரான் செம ஹேப்பி! -
“அதிமுக என்ற கட்சியே இருக்காது.. இன்னும் பல MLAக்கள் தவெகவுக்கு வருவார்கள்” - அமைச்சர் செங்கோட்டையன் -
பாரதிராஜா வேண்டுமென்றே இறந்தார்! 6 மாதத்தில் நடந்தது என்ன? சிகிச்சை அளித்த மருத்துவர் வேதனை












Click it and Unblock the Notifications