திண்டுக்கல்: பிரேக் பிடிக்காத அரசு பஸ் மோதி செருப்பு தைக்கும் தொழிலாளி பரிதாபமாக பலி

பிரேக் பிடிக்காத அரசு பேருந்து மோதியதால் செருப்பு தைக்கும் தொழிலாளி பரிதாபமாக உயிரிழந்தார்.

Subscribe to Oneindia Tamil

திண்டுக்கல்: திண்டுக்கல் பேருந்து நிலையத்தில் பிரேக் பிடிக்காத அரசு பேருந்து மோதியதால் செருப்பு தைக்கும் தொழிலாளி பரிதாபமாக உயிரிழந்தார்.

திண்டுக்கல் பேருந்து நிலையத்தில் இருந்து நேற்று காலை நவாமரத்துப்பட்டி என்ற பகுதிக்குச் செல்லும் பேருந்து பழுதாகி நின்றிருந்தது. இதையடுத்து பனிமனைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. பின்னர் பணிமனையில் இருந்து மெக்கானிக் வந்து அதனை சரிசெய்தார்.

 Bus crash kills one person at Dindigul

இதன் பின்னர் அந்த பேருந்தை ஓட்டுநர் ஓட்டி பார்த்தார். அப்போது பிரேக் பிடிக்கவில்லை. இதனையடுத்து ஓட்டுநர் கட்டுப்பாட்டை இழந்த பேருந்து பேருந்து நிலையத்தில் மணிக்கூண்டு இருந்த இடத்தில் அமர்ந்து செருப்பு தைத்துக்கொண்டிருந்து தொழிலாளி சக்திவேல (35); மீது மோதியது. இதனால் படுகாயமடைந்த சக்திவேல் சிகிச்சைக்காக அரசு தலைமை மருத்துவமனைக்குக் கொண்டு செல்லும் வழியில் இறந்து போனார்.

இது குறித்து வடக்கு காவல்நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகிறார்கள். சக்திவேல் உயிரிழந்த சம்பவம் அறிந்த அவரது உறவினர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் சிறிது நேரம் அங்கு பதட்டம் நிலவியது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+