ஈரோடு அருகே 200 அடி பள்ளத்தில் பஸ் கவிழ்ந்து விபத்து.. 2 பேர் பலி
ஈரோடு அருகே 200 அடி பள்ளத்தில் பேருந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 2 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
ஈரோடு: 200 அடி பள்ளத்தில் பேருந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 2 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
கர்நாடக மாநிலம் மைசூரில் இருந்து 24 பயணிகளுடன் பேருந்து ஒன்று ஈரோடு நோக்கி வந்து கொண்டிருந்தது. திம்பம் மலைப்பகுதியில் பேருந்து சென்று கொண்டிருந்த போது 26வது வளைவில் பேருந்து கவிழ்ந்தது.

இதில் 200 அடி பள்ளத்தில் உருண்டு விழுந்தது பேருந்து. இதனைக் கண்ட அப்பகுதி மக்கள் போலீசார் மற்றும் தீயணைப்புத்துறைக்கு தகவல் தெரிவித்தனர். இதைத்தொடர்ந்து சம்பவ இடத்துக்கு வந்த போலீசார் ராட்சத விளக்குகள் உதவியுடன் பேருந்தில் இருந்தவர்களை கயிறு கட்டி மீட்டனர்.

சுமார் 3 மணி நேர போராட்டத்திற்கு பிறகு பேருந்தில் இருந்தவர்கள் பத்திரமாக மீட்கப்பட்டனர். இருப்பினும் இந்த விபத்தில் 2 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். பலர் படுகாயமடைந்தனர். காயமடைந்தவர்கள் அருகில் உள்ள மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

[எச். ராஜா பேசியதில் தப்பே இல்லை.. மக்கள் சொல்கிறார்கள்! ]
கடுமையான பனிமூட்டம் காரணமாக மலை தெரியாததால் விபத்து நேரிட்டதாக கூறப்படுகிறது. இருப்பினும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார் விசாரித்து வருகின்றனர்.
-
ஈரோடு மாவட்டத்தில் வேலைவாய்ப்பு.. 120 பணியிடங்கள்.. 12 ஆம் வகுப்பு தகுதி தான்! செம சான்ஸ் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி












Click it and Unblock the Notifications