எச். ராஜா பேசியதில் தப்பே இல்லை.. மக்கள் சொல்கிறார்கள்!
சிறை அதிகாரிகளை எச்.ராஜா பேசியதில் தவறு கிடையாது என கருத்துக்கள் பரவி வருகின்றன.
Recommended Video

சென்னை: "இப்படியா சிறைக்குள் பிரியாணி செய்து சாப்பிடுவது? அப்போ எச்.ராஜா பேசியதில் தப்பே கிடையாது" என்று நெட்டிசன்கள் கருத்துக்களை பதிவிட்டு வருகிறார்கள்.
சில வாரங்களுக்கு முன்பு புழல் சிறையில் கைதிகள் சொர்க்க வாழ்க்கை செல்போன் படங்கள் மூலமாக வெளி உலகுக்கு தெரிந்து பரபரப்பானது.
[ராக்கெட் வேகத்தில் உயரும் பெட்ரோல் டீசல் விலை.. வாகன ஓட்டிகள் கலக்கம்!]

சர்ச்சை பேச்சு
இதனால் தமிழக மக்கள் கடும் அதிர்ச்சிக்கு உள்ளானார்கள். அந்த சமயத்தில்தான் திருமயம் அருகே நடைபெற்ற விநாயகர் சதுர்த்தி சம்பவத்தில் எச்.ராஜா போலீசாரிடம் பேசிய பேச்சு சர்ச்சையை ஏற்படுத்தியது.

யோக்கியதை தெரியுதே
அதில் எச்.ராஜா பல்வேறு விஷயங்களை காரசாரமாக பேசியிருந்தாலும், அதில் ஒன்று புழல் சிறை அதிகாரிகள் சம்பந்தப்பட்ட பேச்சு. "முதல்ல நீங்கள் எல்லாம் நீதிமன்றத்தை மதிக்கிறீங்களா? எப்படி மதிக்கிறீங்கன்னுதான் உங்கள் யோக்கியதை தெரியுதே, எல்லாம் ஊழல்.. எங்கும் ஊழல்.." என்று ஆவேசமாக பேசினார்.

பிரியாணி வீடியோ
இதனை தொடர்ந்து, நீதிமன்றம், போலீசாரை அவமதித்துவிட்டதாக வழக்குகளும் எச்.ராஜா மீது செய்யப்பட்டன. அவரும் தொடர்ந்து "தலைமறைவாக" இருக்கிறார்.. அவரை தனிப்படை போலீஸார் வலை வீசி "தேடி"யும் வருகின்றனர். இந்நிலையில் நேற்று சிறைக்குள் கைதிகள் பிரியாணி செய்யும் வீடியோ வைரலானது. இதனை கண்ட நெட்டிசன்கள் நேற்று முதல் ஹெச்.ராஜாவுக்கு ஆதரவான கருத்துக்களை சமூகவலைதளங்களில் பதிவிட்டு வருகிறார்கள்.

வாதம் சரிதானே
"எச்.ராஜா கேட்டதில் தப்பே இல்லை... இதைத்தானே அன்று அவர் பேசினார். இப்போது தெரிந்துவிட்டதாக சிறை வண்டவாளம், அவர் ஒன்றும் இல்லாததை கூறவில்லையே" என்று சரமாரியாக பதிவிட்டு வருகிறார்கள். இவர்களில் 99 சதவீதம் பேர் பாஜகவினராகவே இருக்கக் கூடும் என்பது வேறு விஷயம்.
சிறைத்துறை வாதம் சரி... ஆனால் நீதிமன்றத்தை எச்.ராஜா பேசியது தவறுதானே சார்மார்களே!!
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications