காஞ்சிபுரம் அருகே இருசக்கர வாகனம் மீது அரசு பேருந்து மோதி விபத்து.. 2 இளைஞர்கள் சம்பவ இடத்திலேயே பலி
காஞ்சிபுரம் அருகே இருசக்கர வாகனம் மீது அரசுப் பேருந்து மோதிய விபத்தில் 2 பேர் சம்பவ இடத்திலேயே பலியாயினர்.
Subscribe to Oneindia Tamil
காஞ்சிபுரம்: சுங்குவார்சத்திரத்தில் இருசக்கர வாகனம் மீது அரசுப் பேருந்து மோதிய விபத்தில் 2 பேர் சம்பவ இடத்திலேயே பலியாயினர்.
காஞ்சிபுரம் மாவட்டம் சுங்குவார்சத்திரம் தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்த இருசக்கர வாகனம் மீது அரசு பேருந்து மோதியது. இதில் இரு சக்கர வாகனத்தில் சென்ற, நவீன்குமார் மற்றும் பாலாஜி ஆகியோர் சம்பவ இடத்திலேயே பலியானார்கள்.

தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த போலீசார் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். விபத்து தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த விபத்தால் சுங்குவார்சத்திரம் தேசிய நெடுஞ்சாலையில் சில மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.












Click it and Unblock the Notifications