கோடை விடுமுறை முடிந்து ஊர் திரும்பிய மக்கள்.... கூட்டத்தால் திணறிய பஸ் நிலையங்கள்
நெல்லை: கோடை விடுமுறை முடிந்ததைத் தொடர்ந்து பஸ் நிலையங்களில் நேற்று ஊர் திரும்ப வந்தோரால் திருவிழா கூட்டம் காணப்பட்டதால் அரசு போக்குவரத்து கழகம் திணறிப் போனது.
சென்னை உள்ளிட்ட தொழில் நகரங்களில் வசித்து வருவோர் கோடை விடுமுறையைத் தொடர்ந்து தங்களது பிள்ளைகள், குடும்பத்தினருடன் சொந்த ஊர்களுக்குப் படையெடுத்தனர். இதனால் தென் மாவட்டங்களில் கூட்டம் அலை மோதியது.

இந்த நிலையில் கோடை விடுமுறை முடிந்து இன்று பள்ளிகள் திறக்கப்பட்டன. இதையடுத்து கடந்த சில நாட்களாகவே பலரும் சென்னை உள்ளிட்ட நகரங்களுக்குத் திரும்பி வந்தனர். நேற்று மாலை சொந்த ஊருக்கு பெருமளவிலானோர் திரும்பினர்.
நேற்று மாலை நெல்லை சந்திப்பு ரயில் நிலையத்தில் இருந்து சென்ற அனைத்து எக்ஸ்பிரஸ் ரயில்களிலும் திருவிழா கூட்டம் காணப்பட்டது. இதில் காத்திருப்போர் பட்டியல் 100ஐ தாண்டி விட்டது. தட்கல் டிக்கெட்டில் காத்திருப்போர் பட்டியல் 50ஐ தாண்டி விடடது. நெல்லை எக்ஸ்பிரஸ் ரயிலில் வந்த பயணிகள் தங்கள் ஊருக்கு செல்ல உடைமைகளை வைக்க வரிசையில் நின்று நீண்ட நேரம் காத்திருந்தனர்.
அதிலும் இன்று அதிகாலையே சென்னையில் இறங்கி பள்ளி, அலுவலகததிற்கு செல்ல வசதியாக இருப்பதால் கன்னியாகுமரி பொதிகை எக்ஸ்பிரசில் அதிகப்படியான கூட்டத்தை காண முடிந்தது.
கடந்த சில நாட்களாக நெல்லை வழியாக இயக்கப்படும் சிறப்பு ரயில்களில் முதியோர் டிக்கெட் தவிர மற்ற டிக்கெட்டுகள் அனைத்தும் நிரம்பி வழிகின்றன. இதில் ரயில்களில் இடம் கிடைக்காத பயணிகள் பலர் தமிழக அரசு பஸ்சில் இடம் பிடிக்க போட்டா போட்டி போட்டனர்.
நெல்லை கோட்டத்தில் இருந்து மாலையில் 40 சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டன. நெல்லையில் இருந்து திருப்பூருக்கு 8 சிறப்பு பஸ்களும், கோவைக்கு 8 சிறப்பு பஸ்களும், தென்காசி, சங்கரன்கோவிலில் இருந்து 4 பஸ்களும் இயக்கப்பட்டன. இதுபோல் நெல்லை வழியாக இயக்கப்படும் அனைத்து பஸ்களிலும் பயங்கர கூட்டம் நிரம்பி வழிநதது.
-
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம்












Click it and Unblock the Notifications