போக்குவரத்து அமைச்சரின் மாவட்டத்திலேயே ஸ்தம்பித்த பஸ் போக்குவரத்து.. மக்கள் கடும் அதிருப்தி
கரூர்: போக்குவரத்து துறை அமைச்சரின் மாவட்டத்திலேயே போக்குவரத்து ஸ்தம்பித்ததால் பொதுமக்கள் அதிருப்தி அடைந்துள்ளனர், கரூர் மாவட்டத்தில் இருந்து சுமார் 15 சதவிகித பேருந்துகள் மட்டுமே இயங்குகின்றன.
ஊதியம் ஒப்பந்தம் உள்ளிட்ட போக்குவரத்து தொழிலாளர்களின் 22 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த 1 1/2 வருடங்களாக தமிழக அரசிடம் தொழிலாளர்கள் போராடி வருகின்றனர். மேலும் தொழிற்சங்கங்களின் கோரிக்கைகளை ஏற்காத தமிழக அரசையும், போக்குவரத்து துறையின் மெத்தன போக்கையும் கண்டித்து இதற்கு ஒரு தீர்வு காண வேண்டி வேலை நிறுத்தப் போராட்டத்தில் போக்குவரத்து தொழிலாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.

நேற்று முன்தினம் கோவில்பட்டியில் தொடங்கிய இந்த வேலை நிறுத்தம் திருச்சி, கும்பகோணம், விழுப்புரம் உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் தொடர் வேலை நிறுத்தத்தில் போக்குவரத்து தொழிலாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில் தமிழக போக்குவரத்து துறை அமைச்சர் செந்தில் பாலாஜியின் மாவட்டமான கரூரில் போக்குவரத்து தொழிலாளர்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டு வருவதால் பொதுமக்களின் அன்றாட வேலைகள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.
கரூர் நகரில் இருந்து இயங்கும் பேருந்துகளில் சுமார் 15 சதவிகித பேருந்துகள் மட்டுமே தற்போது இயங்கிவருவதால் பொதுமக்கள் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. கரூர் பேருந்து நிலையம் வெறிச்சோடி காணப்படுவதாலும், போக்குவரத்து துறை அமைச்சர் செந்தில்பாலாஜி ஊரிலேயே இந்த போக்குவரத்து வேலைநிறுத்ம் தீவிரமடைந்துள்ளதால் பொதுமக்கள் மிகவும் அதிருப்தி அடைந்துள்ளனர்.
இந்நிலையில் தமிழ்நாடு அரசு போக்குவரத்து தொழிலாளர்கள் சங்கத்தினர் கரூர் சுங்ககேட்டில் சாலைமறியலில் ஈடுபட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. சாலைமறியலில் ஈடுபட்ட போக்குவரத்து தொழிலாளர்கள் சுமார் 50 க்கும் மேற்பட்டோரை காவல்துறையினர் கைது செய்தனர். மேலும் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
-
மும்மொழி.. மத்திய அரசுக்கு எதிராக அண்ணாமலை முதல் முறையாக கருத்து? -
பிரதமர் மோடியை வணங்கி.. பத்மஸ்ரீ விருது பெற்ற சிலம்ப கலைஞர் பழனிவேல்! தமிழருக்கு பெரிய கவுரவம் -
மாசம் ரூ.10000 கோடி செலவு.. படிச்சு படிச்சு மோடி சொல்ல இதுதான் காரணம்..! -
அண்ணன் வர்றாரு! என்னப்பா ஆரம்பிச்சுருவோமா? அண்ணாமலை ஆரம்பிக்கும் ’பார்ட்டி’.. இதுதான் கொடி, சின்னமா? -
விஜய் செய்த சாணக்கியத்தனம்.. சத்தமில்லாமல் வெளியேற்றப்பட்ட கம்யூனிஸ்ட்கள்! இதை யாரும் கவனிக்கலையே! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
இசக்கி சுப்பையா யார் தெரியுமா? அடுத்து தாவும் அரசியல் புள்ளி இவரா? தவெக பக்கம் சாயும் அதிமுக கோட்டை -
மு.க.ஸ்டாலின் - எடப்பாடி பழனிசாமி இணைவார்கள்!ஆருடம் கணித்த.. ஆதவ் அர்ஜுனா! -
ஈரான் மக்களுக்கு விடிவுகாலம் பிறந்தது.. 87 நாட்களுக்கு பின்பு.. ஈரான் அதிபர் வெளியிட்ட அறிவிப்பு! -
இதெல்லாம் எந்த நினைப்பில் விஜய் செய்கிறார் தெரியலையே.. மிகப்பெரிய ரிஸ்க்.. சறுக்குனா காலிதான்! -
பயிர் கடன் தள்ளுபடியில் விஜய் வைத்த செக்.. 100%, 50% தள்ளுபடிக்கு பின் இருக்கும் ஸ்மார்ட் கணக்கு! -
ஸ்டாலின் கொண்டு வந்த காலை உணவு திட்டம் தொடரும்.. மெனு மாற்றம்.. அமைச்சர் ராஜ்மோகன் உறுதி












Click it and Unblock the Notifications