தஞ்சை உள்ளிட்ட தமிழகத்தில் 3 தொகுதி, நெல்லித்தோப்பில் ஓய்ந்தது பிரசாரம்!
தேர்தலை சந்திக்க உள்ள தஞ்சை உள்ளிட்ட தமிழகத்தின் மூன்று தொகுதிகளிலும் பிரசாரம் இன்றோடு ஓய்கிறது.
சென்னை: தஞ்சாவூர், அரவக்குறிச்சி, திருப்பரங்குன்றம் தொகுதிகளில் இன்று மாலை 5 மணியுடன் பிரசாரம் ஓய்ந்தது. 19ம் தேதி காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்குகிறது.
தமிழகத்தில், தஞ்சாவூர், அரவக்குறிச்சி, திருப்பரங்குன்றம் ஆகிய 3 சட்டசபை தொகுதிகளுக்கு வருகிற 19ம் தேதி தேர்தல் நடைபெறுகிறது. இதில் தஞ்சை, அவரக்குறிச்சி இரண்டும், பணப்பட்டுவாடாவால் நிறுத்தப்பட்ட தொகுதிகளாகும். திருப்பரங்குன்றத்தில் அதிமுக உறுப்பினர் மரணமடைந்ததால் இடைத்தேர்தல் நடைபெறுகிறது.

இந்த 3 தொகுதிகளிலும் அ.தி.மு.க. - தி.மு.க. நேரடியாக களம் காண்கின்றன. மேலும், பா.ஜ.க., தே.மு.தி.க., பா.ம.க. உள்பட சுயேச்சை வேட்பாளர்களும் கோதாவில் குதித்துள்ளனர். ஆனால், திருப்பரங்குன்றம் தொகுதியில் போட்டியிடும் பா.ம.க. வேட்பாளருக்கு மாம்பழம் சின்னம் ஒதுக்கப்படாததால், அங்கு மட்டும் அந்த கட்சி போட்டியிடவில்லை.
கடந்த 5ம் தேதி வேட்பாளர் இறுதிப்பட்டியல் வெளியானதை தொடர்ந்து, 3 தொகுதிகளிலும் பிரசாரம் சூடு பறந்தது. 3 தொகுதிகளிலும் அனல் பறந்து வரும் தேர்தல் பிரசாரம் இன்று மாலை 5 மணியுடன் ஓய்ந்தது. தஞ்சையில் திமுக சார்பில் போட்டியிடும் அஞ்சுகம் பூபதியை ஆதரித்து ஸ்டாலின் இறுதிகட்ட பிரசாரத்தில் ஈடுபட்டிருந்தார்.
இதேபோல், புதுச்சேரி மாநிலம் நெல்லித்தோப்பு தொகுதியிலும் 19ம் தேதி இடைத்தேர்தல் நடைபெறுகிறது. காங்கிரஸ் சார்பில் முதல்வர் நாராயணசாமி, அ.தி.மு.க. சார்பில் ஓம்சக்தி சேகர் உள்பட 8 பேர் போட்டியிடுகின்றனர். இங்கும் இன்று மாலை 5 மணியுடன் பிரசாரம் ஓய்ந்தது.
பிரசாரம் ஓய்ந்ததையடுத்து, வெளியூர்வாசிகள் வெளியேற தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. நெல்லித்தோப்பு தொகுதியில் இடைத்தேர்தலையொட்டி புதுச்சேரியில் அனைத்து மதுக்கடைகளும் மூடப்பட்டுள்ளன.
தஞ்சாவூர், அரவக்குறிச்சி, திருப்பரங்குன்றம், நெல்லித்தோப்பு ஆகிய 4 தொகுதிகளிலும் 19ம் தேதி (சனிக்கிழமை) காலை 7 மணி முதல் மாலை 5 மணி வரை வாக்குப்பதிவு நடைபெறுகிறது.
-
ஒதுங்கும் துரைமுருகன்.. திமுகவின் புதிய பொதுச்செயலாளராகிறாரா ஆ.ராசா? உதயநிதி ஸ்டாலினும் ஆதரவாம்! -
தாத்தா காலத்து பாலிடிக்ஸ் வேலைக்கு ஆகாது! உதய் போடும் மாஸ்டர் ப்ளான்! இனி Gen Z ஸ்டைல் தானாமே! -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
திமுக நாசமா போக காரணமே நாமதான்..ஒரிஜினல் திமுககாரன வளர்த்து விடுங்க! மேடையில் வெடித்த மாஜி மூர்த்தி! -
“திமுக தயவில்தான் தவெக ஆட்சி நடக்கிறது.. நான்தான் வழியனுப்பி வைத்தேன்”.. ஸ்டாலின் ஓபன் டாக்! -
“தனது தலையில் தானே மண் அள்ளிப் போட்டுக் கொண்டுள்ளார் ராகுல்..” முரசொலி சரமாரி விமர்சனம்! -
யார் எம்எல்ஏ, யார் அமைச்சர் என்று முதல்வருக்கே தெரியாத ஆட்சி நடக்கிறது.. உதயநிதி ஸ்டாலின் விமர்சனம்! -
"இது அதுல்ல?.. ஜனநாயகத்தை சிதைப்பதில் பாஜகவும் தவெகவும் ஒண்ணு” - திமுக சரமாரி அட்டாக்! -
2029க்கு டார்கெட் செய்யும் விஜய்.. எப்படியாவது உள்ளே நுழைய வேண்டும்.. திமுக கொடுத்த கேப்.. ராகுல் முடிவு என்ன? -
காங். துரோகம்.. மனக்காயத்தில் தொண்டர்கள்! இந்திய கூட்டணி கூட்டத்தில் பங்கேற்க மாட்டோம்! - திமுக -
அண்ணன் தம்பிகள்தானே! இடைத்தேர்தலில்.. அதிமுக-திமுக கூட்டணி! வாயை விட்ட சுப வீரபாண்டியன்! -
“ஒரு இயக்கம்.. இன்னொரு இயக்கத்தின் சின்னத்தில் போட்டியிடக்கூடாது” - துரை வைகோ!












Click it and Unblock the Notifications