அம்மா, அய்யா, மறக்காதீர், மறந்தும் இருந்து விடாதீர்.. "இலை"யுடன் ஆர்.கே.நகரை பவனி வரும் அமைச்சர்கள்!
சென்னை: ஆர்.கே நகரில் இடைத்தேர்தல் பிரச்சாரம் தொடங்கிய நிலையில் அங்கு தமிழக முதல்வரும், அதிமுக பொதுச்செயலாளருமான ஜெயலலிதாவும் போட்டியிடுவதால் ஒட்டுமொத்த அதிமுக பிரமுகர்களும் அங்குதான் முகாமிட்டுள்ளனர்.
அமைச்சர்கள் அதிமுக நிர்வாகிகள் வீதிவீதியாக ஊர்வலமாக சென்று ஜெயலலிதாவுக்கு ஆதரவாக வாக்கு சேகரித்து வருகின்றனர்.
சென்னை ஆர்.கே.நகர் தொகுதியில் வரும் 27 ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெறுகிறது.

உற்சாகத்தில் அதிமுக:
இத்தேர்தலில் முதல்வரும், அதிமுக பொதுசெயலாளருமான ஜெயலலிதா போட்டியிடுகிறார். முதல்வரே இத்தொகுதியில் போட்டியிடுவதால் அதிமுகவினரும், பொதுமக்களும் பெரும் உற்சாகத்தில் இருக்கிறார்கள். தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதில் இருந்தே இத்தொகுதியின் தேர்தல் களம் சூடு பிடித்து இருக்கிறது.

தேர்தல் கால அலுவலகம்:
இத்தொகுதியில் போட்டியிடும் முதல்வர் ஜெயலலிதாவை ஆதரித்து அதிமுகவின் தலைமை தேர்தல் அலுவலகம் அங்குள்ள தண்டையார்ப்பேட்டை அப்பல்லோ மருத்துவமனை அருகே அமைக்கப்பட்டுள்ளது.

மக்களோடு மக்களாக:
வீதி வீதியாக சென்று வாக்கு சேகரித்து வரும் அமைச்சர்கள் டீக்கடைகள், பெட்டிக்கடைகள் போன்றவற்றில் மக்களோடு மக்களாக கலந்து பேசியும் வருகின்றனர்.

எங்கள் வாக்கு உங்களுக்கே:
மக்களும் தங்கள் பங்குக்கு எங்கள் வாக்கு இரட்டை இலைக்கே என்று முழங்கினர். இந்த ஊர்வலத்தில் அதிமுகவின் ஆண்களும், பெண்களும் நடனமாடியே வாக்கு சேகரித்தனர். நூற்றுக்கணக்கானோர் பங்கேற்ற ஊர்வலத்தில் அமைச்சர் கோகுல இந்திரா அதிமுக கொடியேந்தி வந்து பொதுமக்களிடம் வாக்கு சேகரித்தார்.

வகைவகையாய் வாக்கு சேகரிப்பு:
அமைச்சர்கள் விஜயபாஸ்கர், பா.வளர்மதி ஆகியோர் இரட்டை இலையைக் கையில் எடுத்துக் கொண்டு அம்மாவின் வெற்றி இலை இரட்டை இலைக்கு போடுங்கம்மா ஓட்டு என்று முழக்கமிட்டு வாக்கு சேகரித்தனர்.

தெருவெங்கு பட்டாசு முழக்கம்:
மாநகர பேருந்துகளில் பயணம் செய்த பொதுமக்களிடமும் அமைச்சர்கள் வாக்கு சேகரித்தனர். பேண்டு வாத்தியங்களுடனும் பட்டாசு வெடி சத்தங்களோடு நடைபெற்ற இந்த ஊர்வலத்தில் அமைச்சர்கள், அதிமுக நிர்வாகிகள், மாவட்ட செயலாளர்களோடு ஆயிரக்கணக்கான பொதுமக்களும் பங்கேற்றனர்.

வாக்குப்பதிவு இயந்திரங்களும் ரெடி:
இந்நிலையில் வாக்காளர்களின் போட்டோவுடன் கூடிய மிண்ணனு வாக்கு இயந்திரங்களும் சீல் வைக்கப்பட்டு அந்தந்த வாக்குச் சாவடிகளுக்கு அனுப்பும் பணியும் தேர்தல் ஆணையம் சார்பாக மும்முரமாக நடந்து வருவது குறிப்பிடத்தக்கது.
-
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
Cockroach Party: ஆதவ் அர்ஜுனா சேராத ஒரே கட்சி கரப்பான்பூச்சி ஜனதாதான்! அதிமுக எம்பி இன்பதுரை கிண்டல் -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம்












Click it and Unblock the Notifications