ஜல்லிக்கட்டில் காளைகள் துன்புறுத்தப்படுவதில்லை.. மறுபரீசிலனை செய்ய சி.ஆர். சரஸ்வதி கோரிக்கை
ஜல்லிக்கட்டு விளையாட்டில் காளைகள் துன்புறுத்தப்படுவதில்லை என்று சி. ஆர். சரஸ்வதி கூறியுள்ளார்.
சென்னை: ஜல்லிக்கட்டு விளையாட்டில் காளைகள் துன்புறுத்தப்படுவதில்லை. இதுகுறித்து மத்திய அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அதிமுக செய்தித் தொடர்பாளர் சி.ஆர். சரஸ்வதி கோரியுள்ளார்.
பொங்கல் பண்டிகையின் போது தென் மாவட்டங்களில் ஜல்லிக்கட்டு விளையாட்டு வெகு விமர்சையாக நடைபெறுவது வழக்கம். இந்த விளையாட்டின் போது மாடுகள் துன்புறுத்தப்படுவதாகக் கூறி சுப்ரீம் தடைவிதித்தது. இதனையடுத்து தமிழக அரசு சார்பில் மறுசீராய்வு மனு தாக்கல் செய்யப்பட்டது.

இம்மனு மீதான வழக்கின் இறுதி விசாரணை இன்று சுப்ரீம் கோர்ட்டில் நடைபெற்றது. விசாரணையின் முடிவில், ஜல்லிக்கட்டு ஒரு பொழுதுபோக்கு விளையாட்டல்ல என்றும், ஜல்லிக்கட்டு என்பதே கொடூரமானது என்றும் கூறிய சுப்ரீம் கோர்ட், தமிழக அரசின் சீராய்வு மனுவை தள்ளுபடி செய்தது.
இதுகுறித்து, அதிமுக செய்தித் தொடர்பாளர் சி. ஆர். சரஸ்வதி கூறியதாவது:
சுப்ரீம் கோர்ட் சொல்லி இருப்பது போல் யாரும் காளைகளை துன்புறுத்துவது கிடையாது. காளைகள் இறந்ததாக வரலாறும் கிடையாது. காளைகள் மோதி இளைஞர்கள் இறந்திருக்கிறார்களே தவிர காளைகள் இறந்ததில்லை. இது ஒரு பாரம்பரிய விளையாட்டு. வீர விளையாட்டு. உச்ச நீதிமன்றம் நன்கு பரிசீலனை செய்து ஒரு நல்ல தீர்ப்பை சொல்லி இருந்தால் நன்றாக இருந்திருக்கும்.
ஜல்லிக்கட்டு விளையாட்டு குறித்து தமிழக அரசு தீர்மானிக்கக் கூடிய இடத்தில் இருந்தால் முதல்வர் தடை நீக்கி ஜல்லிக்கட்டை நடத்தி இருப்பார். இது மத்திய அரசும் உச்ச நீதிமன்றமும் சம்மந்தப்பட்ட விவகாரம். ஜல்லிக்கட்டின் தீர்ப்பு அவர்களின் கையில் இருப்பதால், எங்களால் முடிந்த வாதங்களை நாங்கள் எடுத்து வைத்துக் கொண்டிருக்கிறோம். தமிழக அரசு இந்த விளையாட்டை நடத்தியே தீர வேண்டும் என்ற வாதத்தை முன் வைத்து வருகிறது.
ஆனால், உச்ச நீதிமன்றத்தின் இந்தத் தீர்ப்பை பார்க்கும் போது உண்மையில் மனதிற்கு கஷ்டமாக இருக்கிறது. நீதிமன்றம் இதனை மறுபடியும் பரிசீலனை செய்ய வேண்டும். மத்திய அரசும் இது குறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை வைக்கிறோம் என்று சி.ஆர். சரஸ்வதி கூறினார்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications