தேமுதிவுக்கு 4 சதவீத ஓட்டு வங்கி கூட கிடையாது: சி.ஆர்.சரஸ்வதி தாக்கு
சென்னை: தமிழகத்தில் தேமுதிகவிற்கு 4 சதவிகித ஓட்டுக் கூட கிடையாது என்று அதிமுக செய்தி தொடர்பாளரும், நடிகையுமான சி.ஆர். சரஸ்வதி தெரிவித்துள்ளார்.
சென்னை ராயப்பேட்டை ஒய்எம்சி மைதானத்தில் மகளிர் அணி பொதுக்கூட்டம் நேற்று மாலை நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட அக்கட்சியின் தலைவர் விஜயகாந்த் தேமுதிக தனித்து தேர்தலை சந்திக்கும் என்றார்.

இது தொடர்பாக கருத்து தெரிவித்துள்ள சி.ஆர்.சரஸ்வதி, தேமுதிக தனித்து போட்டியிடப் போவதாக அறிவித்துள்ளது. அது அக்கட்சியின் நிலைப்பாடு. அதைப் பற்றி விமர்சனம் செய்ய நாங்கள் தயாராக இல்லை.
ஆனால் இந்த தருணத்தில் ஒரு விஷயத்தை பிரேமலதா தெரிந்துகொள்ள வேண்டும். அவர்கள் தேமுதிக கட்சியைப் பற்றி பேசட்டும். கட்சியின் நிலைப்பாட்டை பற்றி பேசட்டும். எப்போதுமே பிரேமலதா மேடை ஏறினால், ஜெயலலிதாவைப் பற்றி தனிப்பட்ட முறையில் விமர்சனம் செய்கிறார். அதை அவர் நிறுத்திக்கொள்ள வேண்டும்.
அதற்கு எந்த தார்மீக உரிமையும் அவருக்கு இல்லை. எங்கள் இயக்கத்திற்கு வந்த பிறகுதான் 2011ல் அவர்களுக்கு முரசு சின்னம் கிடைத்து கட்சிக்கு அங்கீகாரம் கிடைத்தது. எதிர்க்கட்சித் தலைவர் பதவியும் வழங்கப்பட்டது. வேண்டுமானால் முரசு சின்னத்தை திருப்பிக் கொடுத்துவீட்டு, தனியாக நின்று சின்னத்தை வாங்க சொல்லுங்கள்.
இந்தியாவில் 3-வது பெரிய இயக்கம் அதிமுக. தமிழகத்தில் 4 சதவிகித ஓட்டு வங்கிக் கூட தேமுதிகவுக்கு கிடையாது. ஏற்கனவே உள்ளாட்சித் தேர்தலிலும், நாடாளுமன்றத் தேர்தலிலும் மக்கள் புரிய வைத்தார்கள். இப்போது மக்கள் மீண்டும் புரிய வைக்கக் போகிறார்கள் என்றார்.
-
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன்












Click it and Unblock the Notifications