குடும்பத்தொழில்களில் 14 வயதுக்குட்பட்ட குழந்தைகள் பணிபுரியலாம் – அமைச்சரவை ஒப்புதல்
சென்னை: குடும்பத்தினர் நடத்தும் ஆபத்தில்லாத தொழில்களில் 14 வயதிற்குட்பட்ட குழந்தைகள் பணிபுரியலாம் என்று குழந்தை தொழிலாளர் சட்ட மசோதாவில் மேற்கொள்ளப்பட்ட புதிய சட்ட திருத்தத்திற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
குழந்தைகள் குடும்பத் தொழில்களிலும், பொழுதுபோக்குத்துறையிலும், விளையாட்டுத்துறையிலும், விடுமுறை நாட்களிலும், பள்ளி முடிந்த பின்னரும் ஈடுபட புதிய சட்டம் வழிவகுக்கிறது.
தற்போதைய சமுதாயச் சூழலில் குழந்தைத் தொழிலாளர்கள் முறையை முழுமையாக தடைசெய்வது சரியான நடவடிக்கையாக இருக்காது என மத்திய அரசு தெரிவித்துள்ளது. எனினும், குழந்தை தொழிலாளர்களை நியமிப்பது பிடியாணையின்றி கைது செய்யக்கூடிய குற்றமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இருப்பினும் 14 - 18 வயதிற்குப்பட்ட சிறுவர்கள் அபாயகரமான தொழில்களில் ஈடுபட அனுமதி கிடையாது என்று தெளிவு படுத்தப்பட்டுள்ளது.
விதிமுறைகளை மீறி சிறுவர்களை வேலைக்கு அமர்த்துபவர்களுக்கு கடுமையான தண்டனை வழங்கவும் இந்த திருத்தப்பட்ட மசோதா வழிவகை செய்துள்ளது.
அதேவேளையில், முதல் குற்றத்திற்கு பெற்றோர்களுக்கு எந்த தண்டனையும் அளிக்கப்படாது. வேலைக்கு அமர்த்துபவர்களே முதல் குற்றத்திற்கு பொறுப்பாவார். பெற்றோர்களை பொறுத்தவரை திரும்ப, திரும்ப தவறு இழைத்தால் 10 ஆயிரம் வரை தண்டனை விதிக்கப்படலாம்.
குற்றமிழைப்பவர்களுக்கு 3 வருடம் சிறைதண்டனையும், 50 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதிக்க புதிய சட்டத்தில் வழிவகை செய்யப்பட்டுள்ளது. குழந்தைகளை தொழிலுக்கு அனுப்பும் பெற்றோருக்கான தண்டனை குறைக்கப்பட்டுள்ளது.
முதல்முறை தவறிழைக்கும்போது அவர்களுக்கு தண்டனை விதிக்கப்படாது. இரண்டாவது முறையிலிருந்து 10 ஆயிரம் ரூபாய் அபராதம் மட்டும் விதிக்கப்படும்.
-
அண்ணா சாலை மேம்பாலப் பணி 68% நிறைவு.. மெட்ரோ சுரங்கப்பாதைக்கு மேல் சவாலான கட்டுமானம் விறுவிறுப்பு! -
மகளிர் உரிமைத் தொகை ரூ.2500 இருக்கட்டும், புதிய பயனாளிகளுக்கு அடுத்த விண்ணப்பம் எப்போது -
அஷ்டமத்து சனி ஓவர்! இனிதான் விஜய் ஆட்டம் ஆரம்பம்! ஆட்சியை இழக்கவும் தயங்க மாட்டார்! ஷெல்வி கணிப்பு -
பங்குச்சந்தை வீழ்ச்சி அடையப்போகிறது! தங்கம், வெள்ளி விலை பல மடங்கு உயரும்.. பிரபல எக்ஸ்பர்ட் -
அழகிரி தந்த கிரீன் சிக்னல்.. தவெகவில் இணைகிறார் அழகிரியின் மகள் கயல்விழி.. விஜய் சொன்ன ஒரு வார்த்தை -
ஆதார் கார்டு வைத்திருப்பவர்களுக்கு ஜாக்பாட்.. இலவசமாக புதுப்பிக்க ஒரு வருடம் கால அவகாசம் நீட்டிப்பு! -
224 யூனிட்டுகளுக்கு 200 யூனிட் இலவசம் என்றால் 112 தானே வரனும்.. ஏன் 312 காட்டுகிறது.. விளக்கம் -
5 ஆண்டுக்கு ஒருமுறை சம்பள உயர்வு; ₹69,000 அடிப்படைச் சம்பளம்... மத்திய அரசு போடும் ஸ்வீட் பிளான்! -
ஒரு கூட்டு கிளியாக ஒரு தோப்பு குயிலாக! கோபத்தில் குட்டி சிறுத்தைகள்! வெள்ளைக் கொடியோடி தாய் சிறுத்தை -
சரண்டரான சி.வி.சண்முகம் டீம்.. மீண்டும் இணைகிறது அதிமுக.. எடப்பாடி போட்ட கண்டிஷன்! -
கூண்டோடு காலியாகிறது.. விசிக டாப் தலைகள் மொத்தமாக திமுகவில் ஐக்கியம்? சில்லு சில்லாக சிதறுது! -
கிண்டலுக்குள்ளாகும் தவெக அமைச்சர்கள் பிரஸ் மீட்.. நடிகர் சரத்குமார் தந்த அறிவுரை












Click it and Unblock the Notifications