நாளையுடன் ஓய்கிறது ஏற்காடு இடைத் தேர்தல் பிரசாரம்
ஏற்காடு: ஏற்காடு தனி தொகுதியின் இடைத் தேர்தலுக்கான பிரசாரம் நாளையுடன் ஓய்கிறது. இதையடுத்து அதிமுக, திமுக தரப்பில் பிரசாரம் சூடு பிடித்துள்ளது.
அதிமுக எம்.எல்.ஏ பெருமாள் மறைவைத் தொடர்ந்து ஏற்காட்டில் இடைத் தேர்தல் நடைபெறுகிறது. டிசம்பர் 4ம் தேதி அங்கு வாக்குப் பதிவு நடைபெறவுள்ளது.
அதிமுக சார்பில் பெ.சரோஜா, திமுக சார்பில் மாறன் உள்பட மொத்தம் 11 பேர் போட்டியிடுகின்றனர்.
அதிமுக, திமுக இடையேதான் நேரடிப் போட்டி நிலவுகிறது. மற்ற 9 பேரும் சுயேச்சைகளே.

அதிமுக, திமுக வேட்பாளர்களுக்காக இரு கட்சியினரும் போட்டி போட்டு பிரசாரம் செய்து வருகின்றனர். அதிமுகவுக்காக முதல்வர் ஜெயலலிதா சூறாவளிப் பிரசாரம் செய்தார். அதேபோல திமுகவுக்காக மு.க.ஸ்டாலின் பிரசாரம் மேற்கொண்டார்.
அதிமுக வேட்பாளருக்கு ஆதரவாக அமைச்சர்கள், நடிகர்கள், சரத்குமார் போன்ற கூட்டணிக் கட்சித் தலைவர்கள் பிரசாரம் செய்துள்ளனர்.
விறுவிறுப்பாக நடந்து வரும் பிரசாரம் நாளை மாலை 5 மணியுடன் ஓய்கிறது. அதன் பின்னர் பிரசாரம் நடைபெறாது. மேலும் வெளியூர், வெளிமாவட்டங்களைச் சேர்ந்தவர்கள் தொகுதியை விட்டு வெளியேறி விட வேண்டும்.
நோட்டா
தமிழகத்தில் முதல் முறையாக ஏற்காடு இடைத் தேர்தலில் யாருக்கும் வாக்களிக்கவில்லை என்ற பொத்தான் அதாவது நோட்டா மின்னணு வாக்குப் பதிவு இயந்திரத்தில் இங்குதான் பொருத்தப்ப
ஏற்காடு தொகுதியில் மொத்தம் 2,40,290 வாக்காளர்கள் உள்ளனர். பெண்கள்தான் அதிகம் உள்ளனர். 6 திருநங்கையரும் வாக்காளர் பட்டியலில் இடம் பெற்றுள்ளனர்.
மொத்தம் 290 வாக்குச் சாவடிகள் வாக்குப் பதிவுக்காக அமைக்கப்பட்டுள்ளது. காலை 8 மணிக்கு வாக்குப் பதிவு தொடங்கி மாலை 5 மணி வரை இடைவிடாமல் நடைபெறும்.
அனைத்து வாக்குச் சாவடிகளுமே பதற்றமானவை என்று அறிவிக்கப்பட்டுள்ளதால் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. 600-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகிறார்கள். இவர்களை தவிர மாவட்ட போலீசார் 500-க்கும் மேற்பட்டவர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டு வருகிறார்கள்.
269 வாக்குச்சாவடிகளில் நடைபெறும் வாக்குப்பதிவு இணையதளத்தில் நேரடியாக கண்காணிக்கப்பட்டு ஒளிபரப்பாக உள்ளது.
-
யார் எம்எல்ஏ, யார் அமைச்சர் என்று முதல்வருக்கே தெரியாத ஆட்சி நடக்கிறது.. உதயநிதி ஸ்டாலின் விமர்சனம்! -
காங். துரோகம்.. மனக்காயத்தில் தொண்டர்கள்! இந்திய கூட்டணி கூட்டத்தில் பங்கேற்க மாட்டோம்! - திமுக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
‘அல்காரிதம்’ புரியாததால் வந்த வினை! தவெகவின் அலையைக் கணிக்கத் தவறிய டிஆர்பி ராஜா.. அடியோடு மாறுதாம்! -
“முஸ்லீம் மக்களை காப்பாற்றும் லட்சணம் இதுதானா?" TVK + IUML கட்சிகளை லெஃப்ட் ரைட் வாங்கிய திமுக -
ராஜாக்கள் மந்திரியானால் இப்படித்தான்! டி.ஆர்.பி ராஜாவுக்கு எதிராக கிளம்பிய மா.செ.க்கள்! -
திமுக நாசமா போக காரணமே நாமதான்..ஒரிஜினல் திமுககாரன வளர்த்து விடுங்க! மேடையில் வெடித்த மாஜி மூர்த்தி! -
தாத்தா காலத்து பாலிடிக்ஸ் வேலைக்கு ஆகாது! உதய் போடும் மாஸ்டர் ப்ளான்! இனி Gen Z ஸ்டைல் தானாமே! -
"இது அதுல்ல?.. ஜனநாயகத்தை சிதைப்பதில் பாஜகவும் தவெகவும் ஒண்ணு” - திமுக சரமாரி அட்டாக்! -
உதயநிதிக்கு ஸ்டாலின் சொன்ன நோ! செயல் தலைவர் பதவி கிடையாது.. கூர்க் ரகசிய மீட்டிங்கில் முடிவு? -
ஸ்டாலினை ஓரங்கட்டிவிட்டு விஜய்யை வாரி அணைத்த ராகுல் காந்தி! பின்னணியில் டெல்லி மாஸ்டர் பிளான் -
"கடைசி மூச்சு வரை உங்களுக்காக உழைப்பேன்!" - கலைஞர் கருணாநிதியின் இறுதிப் பேருரை.. என்ன பேசினார்?












Click it and Unblock the Notifications