அதிமுக, திமுகவால் யார் பிரதமர் என்று கூற முடியுமா?: பிரேமலதா விஜயகாந்த்
விழுப்புரம்: அதிமுக, திமுகவால் யார் பிரதமர் என்று கூற முடியுமா இல்லை அவர்கள் எந்த அணியில் இருக்கிறார்கள் என்பதை தான் கூற முடியுமா? என்று பிரேமலதா விஜயகாந்த் கேள்வி எழுப்பியுள்ளார். அதிமுக வாக்களித்தபடி ஆட்சிக்கு வந்தவுடன் மின்வெட்டு பிரச்சனையை தீர்த்ததா என்று அவர் மேலும் கேள்வி எழுப்பினார்.
விழுப்புரத்தில் போட்டியிடும் தேமுதிக வேட்பாளர் உமாசங்கரை ஆதரித்து அக்கட்சியின் தலைவர் விஜயகாந்தின் மனைவி பிரேமலதா நேற்று மாலை விழுப்புரத்தில் பிரச்சாரம் செய்தார்.
அப்போது அவர் கூறுகையில்,

5 முனை போட்டி
வரும் நாடாளுமன்ற தேர்தல் மிகவும் முக்கியமான தேர்தல். நன்றாக சிந்தித்து வாக்களியுங்கள். தமிழகத்தில் தற்போது 5 முனை போட்டி உள்ளது. எங்கள் வெற்றி வேட்பாளர் உமாசங்கருக்கு முரசு சின்னத்தில் வாக்களிக்குமாறு கேட்டுக் கொள்கிறேன்.

மோடி
மோடி குஜராத்தை முதன்மை மாநிலமாக வைத்துள்ளார். அவர் பிரதமர் ஆனால் நாட்டை லஞ்சம், ஊழல் இல்லாத வல்லரசாக ஆக்குவார்.

விழுப்புரம்
விழுப்புரம் நகராட்சியில் மொத்தம் 42 வார்டுகள் உள்ளன. இங்கு எந்த ஒரு அடிப்படை வசதிகளும் செய்து கொடுக்கப்படவில்லை. இங்குள்ள மக்களின் அடிப்படை பிரச்சனைகளும் தீர்க்கப்படவில்லை. விழுப்புரம் மாவட்டத்தில் 144 தடை உத்தரவு எவ்வளவு காலம் இருந்தது என்பது உங்களுக்கு நன்கு தெரியும்.

மின்வெட்டு
நாங்கள் ஆட்சிக்கு வந்தால் மூன்றே மாதத்தில் மின்வெட்டு பிரச்சனையை தீர்ப்போம் என்று வாக்குறுதி அளித்தார்கள். ஆனால் இன்றும் மின்வெட்டு பிரச்சனை உள்ளது. குடிநீர் பிரச்சனை, பால் விலை உயர்வு, பேருந்து கட்டண உயர்வு ஆகியவை குறித்து கேள்வி எழுப்பியதற்காக சட்டசபையில் இருந்து நீக்குகிறார்கள்.

பிரதமர்
நாங்கள் மோடி தான் பிரதமர் என்று கூறி வாக்கு கேட்கிறோம். அதிமுக, திமுக ஆகிய கட்சிகளால் யார் பிரதமர் என்று கூற முடியுமா இல்லை அவர்கள் எந்த அணியில் இருக்கிறார்கள் என்பதை தான் கூற முடியுமா?

பாஜக
திமுக, காங்கிரஸ் கட்சிகள் செய்த ஊழலால் இந்தியா தலைகுனிந்து நிற்கிறது. வரும் தேர்தலில் பாஜக கூட்டணி 320 தொகுதிகளை கைப்பற்றும். வாஜ்பாய் ஆட்சியில் தங்க நாற்கரம் சாலை அறிமுகப்படுத்தப்பட்டது போன்று, மோடி ஆட்சியில் நதிகள் இணைக்கப்படும். இந்தியா வல்லரசாக மாற முரசு சின்னத்தில் வாக்களியுங்கள் என்றார்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ்












Click it and Unblock the Notifications